கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது. மேலும், வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் இதில் ஆண்டி ஆக்ஸிடெண்டுகளும் நிறைந்துள்ளது. கொய்யாவை தொடர்ந்து சாப்பிடுவது பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது. மேலும் இதில் ஆண்டி ஆக்ஸிடெண்டுகளும் நிறைந்துள்ளது. மேலும், வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. கொய்யாவை தொடர்ந்து சாப்பிடுவது பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது).
கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலத்திற்கு மிகவும் நல்லது. மூலத்திற்கு மிகப்பெரிய காரணம் மலச்சிக்கல். கொய்யா சாப்பிடுவதால் மலச்சிக்கலும் நீங்கும். அதோடு மூலமும் சரியாகும்.
மூளை ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க தேவையான அனைத்து வைட்டமின்களும் கொய்யாவில் காணப்படுகின்றன. அவற்றில் வைட்டமின் பி 3 மற்றும் வைட்டமின் பி 6 உள்ளன, இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உங்கள் நரம்புகளை தளர்த்தும்.
கொய்யாவில் தாமிரம் உள்ளது. இது ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் உறிஞ்சுதலுக்குத் தேவையான முக்கியமான கனிமமாகும். இது உங்கள் தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்பட உதவுகிறது.
கொய்யா பழத்தில் உள்ள இரண்டு மிக முக்கிய அம்சங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக இருக்க காரணமாகிறது. முதலாவதாக, இது நார்ச்சத்து நிறைந்தது, இரண்டாவதாக, இது மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த இந்த இரண்டு பண்புகளும் தேவை.
கொய்யாப்பழம் கேரட்டைப் போல வைட்டமின் ஏ சத்து நிறைந்ததாக இல்லாவிட்டாலும், அது ஊட்டச்சத்துக்கான ஆதாரமாக இருக்கிறது. உங்கள் தினசரி பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் ஏ உட்கொள்ளலை நிறைவேற்றவும், உங்கள் கண்களை நல்ல நிலையில் வைத்திருக்கவும் குறைந்தபட்சம் இது உதவும்.
கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது, இதனால் நீங்கள் இளமையாக காட்சி அளிப்பீர்கள். முதுமை என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் நிச்சயமானது என்றாலும், தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது குறைந்த பட்சம் அதனை ஒத்திப் போடும்.