Guru Vakra Nivarthi: நவ கிரகங்களில் சுப கிரகமாக உள்ள குரு பகவான், தனம், குடும்பம், வாக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றுக்கு காரகராக இருக்கிறார். நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்ற குரு வரும் பிப்ரவரி 4ம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் மூலம் பலன் பெறும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
கிரக பெயர்ச்சிகள் மட்டுமல்லாது, கிரகங்கள் வக்ர பெயர்ச்சிகள், வக்ர நிலை, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் என அனைத்தும், அனைத்து ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், குருவின் வக்ர நிவர்த்தியினால், சில ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள் காத்திருக்கிறது என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.
குரு பகவான்: தெய்வங்களின் குரு எனப்படும் குரு பகவான், அறிவு, கல்வி, குழந்தைகள் மற்றும் திருமணம் ஆகியவற்றின் காரகராக கருதப்படுகிறார். குருவினால் பாக்கியம் பெற்ற ராசிக்காரர்களின் தொழில், குடும்ப வாழ்க்கை இரண்டும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிர்ஷ்டத்திற்கும், பணத்திற்கும் குறைவிருக்காது.
குரு வக்ர நிவர்த்தி: வரும் பிப்ரவரி 4, செவ்வாய்கிழமை, குரு ரிஷபத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். ரிஷப ராசியில் குரு, 2025 பிப்ரவரி 4ம் தேதியன்று மதியம் 1:46 மணிக்கு வக்ர நிவர்த்தி அடையும் நிலையில், மேஷம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும், பணமும் குறையாமல் இருக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
மேஷம்: குரு வக்ர நிவர்த்தி காரணமாக, மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். கிரக நிலை அவர்களின் நிதி நிலையை வலுப்படுத்தும். திடீர் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உறவுகள் மேம்படும். உங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் நன்மைகள் இருக்கும்.
ரிஷபம்: குரு வக்ர நிவர்த்தி காரணமாக, ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். எந்த வேலையைத் தொடங்கினாலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவுடன் முன்னேறுவீர்கள். நீங்கள் முயற்சி செய்தால், உங்கள் முழுமையடையாத பல பணிகளை முடிக்க முடியும். வியாபாரம் செய்பவர்களும் பல சலுகைகளைப் பெறலாம். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இது மிகவும் நல்ல நேரம்.
கன்னி: குரு வக்ர நிவர்த்தி காரணமாக, கன்னி ராசிகளுக்கு வாழ்க்கையில் அனைத்து வகையுலும் வெற்றிகளைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது மிகவும் நல்ல நேரம். வேலையில் திருப்தி அடைவார்கள். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகளும் திறக்கப்படும். நீங்கள் போட்ட திட்டங்கள் வெற்றியடையும். சிலருக்கு திடீர் நிதி ஆதாயமும் கூடும்.
விருச்சிகம்: குரு வக்ர நிவர்த்தி காரணமாக, விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுப பலன்களுக்கு குறைவிருக்காது. குருவின் அருளால் உங்கள் துணையுடன் அன்பும் புரிந்துணர்வும் அதிகரிப்பது உங்களுக்கு அமைதியைத் தரும். காதல் உறவுகளும் இனிமையாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வருமானம் பெருகும், நிதி நிலை வலுவடையும். நிறைய பணம் வரும்.
மகரம்: குரு வக்ர நிவர்த்தி காரணமாக, மகர ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் குருவின் அருளால் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றுவது முக்கியம். உத்தியோகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திடீரென்று நிலுவையில் உள்ள பதவி உயர்வு கிடைக்கலாம். உங்கள் பணி பாராட்டப்படும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.