டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த 10 வீரர்களை இங்கு காணலாம்.
டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் அடிப்பது எளிதாகிவிட்டது என்றாலும் அதிக எண்ணிக்கையில் அடிப்பது சற்று பெரிய விஷயம் எனலாம்.
8. 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து வீரர் கிரைக் மெக்மில்லன் மற்றும் 2012ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து வீரர் லுக் ரைட் ஆகியோர் தலா 13 சிக்ஸர்களை அடித்தனர்.
7. 2014ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து வீரர் ஸ்டீபன் மைபர்க் மற்றும் 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் ஆகியோர் தலா 13 சிக்ஸர்களை அடித்தனர்.
6. 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச வீரர் தமீம் இக்பால் 14 சிக்ஸர்களை அடித்தார்.
5. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் 14 சிக்ஸர்களை அடித்துள்ளார். இன்னும் ஒரு போட்டியில் இன்று (ஜூன் 23) விளையாடுவார். எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
4. 2012ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் 15 சிக்ஸர்களை அடித்தார்.
3. 2012ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் 15 சிக்ஸர்களை அடித்தார்.
2. 2012ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகளின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் 15 சிக்ஸர்களை அடித்தார்.
1. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் 17 சிக்ஸர்களை அடித்துள்ளார். இன்னும் ஒரு போட்டியில் நாளை (ஜூன் 24) விளையாடுவார். எண்ணிக்கை அதிகரிக்கலாம்.