OBC certificate without ration card : ஓபிசி சான்றிதழ் ரேஷன் கார்டு இல்லாமல் பெற முடியும். எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
OBC certificate without ration card News Tamil : மத்திய அரசு பணிகளுக்கு விண்ணபிக்க ஓபிசி சான்றிதழ் அவசியம். அதனை எப்படி வாங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
இப்போது மத்திய ரயில்வே துறையில் இருக்கும் என்டிபிசி (NTPC) காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 12 ஆம் வகுப்பு மற்றும் ஒரு டிகிரி முடித்தவர்கள் என இரண்டு விதமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
சுமார் 10 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த தேர்வில் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த தேர்வு டிகிரி முடித்தவர்கள் அக்டோபர் 13 ஆம் தேதிக்குள்ளும், 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் அக்டோபர் 20 ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.
1989 ஆம் ஆண்டு பிறந்தவர்கள் கூட இந்த இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தால் ஓபிசி சான்றிதழ் தேவை.
ஓபிசி சான்றிதழ் பெற ஆதார் அட்டை, வருமான வரிச் சான்றிதழ், ரேஷன் கார்டு, சாதிச் சான்றிதழ், புகைப்படம் தேவை. இதில் வருமான வரிச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வருமானவரிச் சான்றிதழ் விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, ஆதார் அட்டை அவசியம். ஒருவேளை ரேஷன் கார்டு இல்லை என்றால் இப்போது ரேஷன் கார்டுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் அதற்கு ஒப்புகைச் சீட்டு கிடைக்கும். அதை வைத்தால் கூட போதுமானது.
இ-சேவை மூலமாக விண்ணப்பித்தால் உள்ளூர் கிராம நிர்வாக அலுவலருக்கு உங்கள் வருமானவரிச் சான்றிதழ் விண்ணப்பம் செல்லும். அதன்பின் வருவாய் இன்ஸ்பெக்டர், அதன்பிறகு வட்டாட்சியருக்கு செல்லும். இவர்களை எல்லாம் நேரடியாக சந்தித்து சீக்கிரம் சான்றிதழ் வேண்டும் என கோரிக்கை வைத்தால் உடனடியாக வருமான வரிச் சான்றிதழ் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இதனையடுத்து வருமானவரிச் சான்றிதழை பெற்று இ-சேவை மையத்தில் இருந்து ஓபிசி சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் இன்ஸ்பெக்ட்ர் மற்றும் வட்டாட்சியருக்கு என சென்று விண்ணப்பம் ஒப்புதல் வழங்கப்படும். இதன்பிறகு அதனை எடுத்து நீங்கள் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.