PAN card உடன் ஆதார் கார்டை இரண்டு நிமிடத்தில் இணைக்கும் வழி

பான் கார்டுகளையும் ஆதார் அட்டையுடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. எனவே நீங்கள் இன்னும் உங்கள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், எச்சரிக்கையாக இருங்கள். மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் ஆதார் இணைப்பதற்கான கடைசி தேதி, மார்ச் 31, 2021 ஐ நிர்ணயித்துள்ளது. அதாவது உங்களுக்கு 24 மணிநேரம் மட்டுமே உள்ளது. 

மார்ச் 31 க்குள் ஆதார் அட்டையுடன், பான் அட்டையை இணைக்காவிட்டா, உங்கள் பான் அட்டை பயனற்றதாக மாறக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், வருமான வரிச் சட்டத்தின் கீழும் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். PAN அட்டையை ஆதார் உடன் இணைப்பதற்கான எளிதான வழி இது. இரண்டு நிமிடங்களில் உங்கள் தொலைபேசியிலிருந்து ஆதார் உடன் PAN உடன் இணைக்க முடியும்.

Also Read | அழகான நாடுகளும், அவற்றின் மதிப்பு மிக்க பாஸ்போர்ட்களும்

1 /5

பான் கார்டுடன் ஆதார் இணைக்க, நீங்கள் முதலில் அதிகாரப்பூர்வ வருமான வரி தளமான https://www.incometaxindiaefiling.gov.in/home க்கு செல்ல வேண்டும். 

2 /5

இதற்குப் பிறகு, தளத்தில் ஆதார் இணைப்பு என்ற தெரிவு இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.

3 /5

உங்கள் பான் எண்ணை உள்ளிடவும், அதன் பிறகு ஆதார் எண்ணுடன் உங்கள் பெயரை உள்ளிடவும். இப்போது கேப்ட்சா குறியீடு தோன்றும். அதை உள்ளிட வேண்டும். அவ்வாறு செய்த பிறகு, இணைப்பு தளத்தை சொடுக்கவும். இதைக் கிளிக் செய்தால் தானாகவே சரிபார்க்கப்படும், மேலும் உங்கள் ஆதார் பான் அட்டையுடன் இணைக்கப்படும்.

4 /5

ஆதார் மற்றும் பான் கார்டில் உங்கள் பெயர் வேறுபட்டால், உங்களுக்கு OTP தேவைப்படும். இது OTP ஆதார் உடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைலில் வரும். OTPஐ உள்ளிட்டவுடன், உங்கள் ஆதார் எண் பான் எண்ணுடன் இணைக்கப்படும்.

5 /5

எஸ்எம்எஸ் மூலம், உங்கள் ஆதார் மற்றும் பான் அட்டையை இணைக்கலாம். இதற்காக, நீங்கள் முதலில் UIDPN ஐ தட்டச்சு செய்து உள்ளிடவும். பிறகு பான் மற்றும் ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும். இந்த தகவலை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பவும். இப்போது வருமான வரித் துறை உங்கள் இரு எண்களையும் இணைக்கும் பணியை முன்னெடுக்கும்.