Brain Boosting Activities : நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது நாம் நினைப்பது போல, எளிதான காரியம் அல்ல. இதற்கு ஒரு சில நடவடிக்கைகளை நாம் தினசரி செய்ய வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
Brain Boosting Activities : பிறக்கும் போதே யாருமே அறிவாளியாகவோ, புத்திசாலியாகவோ பிறப்பதில்லை. அவரவர்கள், செய்யும் வேலைகளை பொறுத்தும், அவர்களின் வாழ்க்கை முறைகள் குறித்தும் அவர்கள் எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறார்கள் என்பது அமையும். நீங்கள், உங்கள் மூளை வேலையே செய்யாதது போல நினைத்தாலும், நீங்கள் புத்திசாலியே இல்லை என்று உணர்ந்தாலும் அது உண்மையல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மூளையை மேம்படுத்த நினைத்தால், நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் சில இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
நம் மூளையிடம் இருக்கும் பவர், நமக்கே தெரியாது. நாம் நினைத்தால், நினைக்கும் விஷயங்களை ரியாலிட்டியாக மாற்றலாம். அந்த அளவிற்கு சக்தி உள்ள நமது மூளையை பல சமயங்களில் நாம் பயன்படுத்தவே தவறி விடுகிறோம். நம் மூளையை சுறுசுறுப்பாக்கி, ஷார்ப்பாக வைத்திருக்க சில தினசரி நடவடிக்கைகள் உதவும். அவை என்ன தெரியுமா?
மனிதனாக பிறந்த அனைவருக்குமே தூக்கம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே, தினசரி 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். இது, உங்கள் மூளை சரியாக ரெஸ்ட் எடுப்பதற்கு உதவும்.
புத்தகம் படிப்பது தன்னை உயிர்ப்புடன் வைத்திருப்பதாக பலர் கூறுவர். உண்மையில், படிக்கும் ஆர்வம் ஒருவரின் மூளையை துடிப்புடன் வைத்திருக்கிறது. தினசரி படிப்பவர்கள், கவனம் சிதறாமல் இருப்பார்கள் என்றும், கற்பனை திறன் அவர்களுக்கு அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
உங்கள் மூளையை ஷார்ப்பாக வைத்திருக்க, உங்கள் தினசரி பழக்க வழக்கங்களிலும் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். தினமும் காலையில் உடற்பயிற்சி, ஹெல்தியான சாப்பாடு போன்றவை ஒருவரின் உடலுக்கு மட்டுமன்றி, மூளைக்கும் ஆரோக்கியத்தை தருகிறது.
புதிதாக எந்த விஷயம் கற்றுக்கொண்டாலும், நமது மூளை விழிப்புடன் இருக்கும். அந்த வகையில், புதிதாக ஒரு மொழியை கற்றுக்கொண்டீர்கள் என்றால், உங்களுக்கு அந்த மொழியை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டுவது மட்டுமன்றி, உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவும்.
மூளையை கூர்மையாக வைத்திருக்கும் விளையாட்டுகளையும் நீங்கள் விளையாடலாம். குறுக்கெழுத்து போட்டி, சுடோக்கு போன்றவை அது போன்ற விளையாட்டுகளுக்குள் ஒன்றாகும்.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றாலோ, அல்லது ஏதேனும் ஒரு தருணத்தில் கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றினாலோ, அதை கேட்கவோ, அது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளவோ தயங்காதீர்கள். இது, உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
“இது முடியாது..இது நடக்காது..” என உங்களுக்குள் நீங்களே சில விஷயங்களை சொல்லிக்கொண்டால் உங்கள் மூளையும் அதை நம்ப ஆரம்பித்து விடும். எனவே, உங்களால் முடியாது என்று உள்ளுக்குள் ஏதேனும் ஒன்று உங்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தாலும், அதை தகர்த்து “முயன்றுதான் பார்ப்போமே..” என்ற எண்ணத்துடன் முயற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக, நீங்கள் யோசிக்கும் விதத்தில் மாற்றம் தெரியும்.