தொடர்ந்து நிதி உதவி கேட்டு தொந்தரவு செய்பவர்களிடம் பணம் இல்லை என சொல்வது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்
அவசர காலத்தில் உதவி செய்வதை வைத்து, அடிக்கடி பணம் உதவி கேட்பவர்களிடம், இல்லை என மறுப்பு தெரிவிப்பது என உங்களுக்கு தெரியவில்லையா?
அவசர காலத்தில் ஒருவருக்கு ஒருவர் பண உதவி செய்து கொள்வது அவசியமானது. ஆனால், ஒருவர் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் அதனை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த சிக்கலைப் பற்றி உங்கள் நண்பரிடம் நேரடியாக சொல்லிவிடுவது நல்லது. நீங்கள் தொடர்ந்து கடன் கொடுப்பதில் சிக்கல் இருந்தால், "நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன், ஆனால் மீண்டும் மீண்டும் "கடன் கொடுப்பது எனது சொந்த செலவுகளை பாதிக்கிறது" என்று நீங்கள் தெளிவாகச் சொல்லலாம். இப்படி சொல்வதன் மூலம் உங்கள் நண்பர் உங்கள் நிலையை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
பண வரவு செலவு பிரச்சனையாக இருக்கிறது என்றால் உங்களுக்கு இருக்கும் நெருக்கடிகளை சொல்லி புரியவைக்கலாம். அதன்பிறகு, நான் இப்போது கடன் கொடுக்க முடியாது என்பதை தெரிவிக்கலாம்.
உங்கள் நண்பர் அடிக்கடி நிதி நெருக்கடியில் இருந்தால், நீங்கள் அவருக்கு மற்ற நிதி விருப்பங்களைப் பற்றி ஆலோசனை கூறலாம். எடுத்துக்காட்டாக, பகுதி நேர வேலையில் ஈடுபடலாம் என்று அறிவுறுத்துங்கள். இது அவர்களை சொந்த காலிலேயே நிற்க உதவும்.
உங்கள் நண்பர் கடனைத் திரும்பத் திரும்பக் கேட்டும், திரும்பத் திரும்ப மறுப்பதில் சிரமம் ஏற்பட்டால், வரம்பை நிர்ணயிப்பது முக்கியம். எவ்வளவு கடன் கொடுக்கலாம், எவ்வளவு அடிக்கடி கொடுக்கலாம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து கொள்ளலாம். இத்தகைய எல்லைகள் உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இடையே தெளிவைக் காக்கும்.
உங்கள் நண்பர் ஒரு பிறரிடம் பண உதவி கேட்டு கொடுப்பது பற்றி யோசிக்கலாம். அதுவும் உங்களின் நிதி நிலைகளை கருத்தில் கொண்டு இந்த விஷயங்கள் குறித்து பரிசீலிப்பது அவசியம்.