Cloves For Weight Loss: உடலின் பல்வேறு இடங்களில் கூடுதல் கொழுப்பு சேர்வதால் உடல் பருமன் அதிகரிக்கின்றது. இதனால் பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
Cloves For Weight Loss: உடல் பருமன் இரத்த சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவற்றின் ஆபத்தை பெருமளவு அதிகரிக்கிறது. ஆகையால் உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் உடல் எடையை உடனே குறைப்பது நல்லது. இந்திய சமையலறையில் இருக்கும் பல மசாலாப் பொருட்கள் சுவையுடன் மருத்துவ குணங்களுக்கும் பெயர் பெற்றவை. அப்படி ஒரு மசாலா பொருளான கிராம்பை பயன்படுத்தி எவ்வாறு உடல் எடையையும் தொப்பை கொழுப்பையும் (Belly Fat) குறைப்பது என இங்கே காணலாம்.
நம் தினசரி சமையலில் பயன்படுத்தபடும் பல வித மசாலாக்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடல் எடையையும் குறைக்க உதவுகின்றன. அவற்றில் ஒன்றுதான் கிராம்பு. கிராம்பில் வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, கார்போஹைட்ரேட் ஆகியவை உள்ளன.
கிராம்பில் உடல் பருமனை குறைக்கும் முக்கிய பண்புகள் அதிகம் உள்ளன. உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளில் கிராம்பை பயன்படுத்தலாம். அந்த வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கிராம்பு நீர் உங்கள் உடல் கொழுப்பைக் குறைக்க உதவியாக இருக்கும். இதை செய்ய, ஒரு சொம்பு நீரில் சில கிராம்புகளை போட்டு இரவு முழுவதும் அப்படியே விடவும். பிறகு காலையில் வெறும் வயிற்றில் இதை ஒரு கிளாஸ் குடிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டு வேகமாக எடை குறையத் தொடங்குகிறது.
சூடான நீரில் கிராம்புகளை 5-10 நிமிடங்கள் போட்டு கொதிக்க வைத்து கிராம்பு தேநீர் தயார் செய்யலாம். இந்த தேநீரை ஒரு நாளைக்கு ஒரு முறை தவறாமல் உட்கொள்ளலாம். இது செரிமானத்தை மேம்படுத்தவும், பசியை அடக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
வீட்டில் நாம் அரைக்கும் மசாலா பொடியில் கிராம்பையும் சேர்த்து அரைத்து இதை அனைத்து உணவுகளிலும் சேர்க்கலாம். கிராம்பு சேர்க்கப்பட்ட மசாலா தூள், சூப், காய்கறி பொரியல், பிரியாணி, தயிர் பச்சடி, புலாவ் ஆகியவற்றில் இந்த பொடியை பயன்படுத்தலாம்.
உங்களுக்கு பிடித்த ஸ்மூத்தி ரெசிபியில் ஒரு சிட்டிகை கிராம்பு சேர்க்கவும். இப்படி செய்வது ஸ்மூத்திக்கு வித்தியாசமான சுவையை சேர்க்கும். இது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிப்பதுடன் அவ்வப்போது பசி எடுப்பதையும் தடுக்கின்றது.
ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் முழு கிராம்புகளை குறைந்த வெப்பத்தில் ஊறவைத்து கிராம்பு கலந்த எண்ணெயைத் தயாரிக்கவும். இந்த நறுமண எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தவும். இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு எடையை குறைக்கவும் உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.