Air Travel: விமான பயண தேதியோ நேரம் மாறினாலும் கட்டணம் வசூலிக்காத நிறுவனம் எது?

விமான பயணத்தின் தேதி மற்றும் நேரத்தில் மாறுதல்கள் செய்தாலும், இந்த விமான நிறுவனங்கள் எந்த கட்டணத்தையும் வசூலிக்காது. அவை எவை தெரியுமா?

 

புதுடெல்லி: இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் ஏசியா இந்தியா ஆகிய விமான நிறுவனங்கள் 2021 மே 15 வரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் பயண நேரம் மற்றும் தேதி மாற்றங்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்காது என அறிவித்துள்ளன.

ALSO READ | கொரோனா காலத்தில் நோய் எதிப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் வேம்பு, கற்றாழை!

1 /5

தனியார் துறை விமான நிறுவனம் ஸ்பைஸ்ஜெட்  நிறுவனம், பயணத்திற்கு ஐந்து நாட்கள் முன் வரை பயணிகள், டிக்கெட்டின் தேதி அல்லது நேரத்தில் செய்யும் மாற்றங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது (Changing date and time of the ticket) என அறிவித்துள்ளது. 

2 /5

முன்னதாக, பயணத்திற்கு ஏழு நாட்கள் முன் வரை டிக்கெட் தேதி அல்லது நேரத்தில் செய்யப்படும் மாற்றங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என கூறியிருந்தது.

3 /5

புதிய அறிவிப்பின் கீழ், ஏப்ரல் 17 முதல் மே 10 வரை நேரடி உள்நாட்டு விமானங்களுக்கு ஏப்ரல் 17 முதல் மே 10 வரை டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் ஒரு முறை, மாற்றம் செய்ய  கட்டண விலக்கு பெறலாம் என்று ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.

4 /5

மகாராஷ்டிரா, டெல்லி போன்ற இடங்களில் COVID -19 தொற்று பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக குறிப்பிட்ட நேரம் அல்லது முழுமையான லாக்டவுன் செயல்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக பயணிகள் டிக்கெட்டுகளை ரத்து செய்ய நேர்ந்தால், அவர்களுக்கு இழப்பு ஏற்படும்.

5 /5

பயணிகள் நிர்பந்தம் காரணமாக பயணத்தை மாற்றி அமைக்கும் போது அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்த விமான நிறுவனங்கள் விரும்பவில்லை. அதனால் தான் பயணத்தின் தேதி மற்றும் நேரத்தை கட்டணம் ஏதும் இல்லாமல் மாற்ற  விலக்கு அளித்துள்ளன.