விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பலரும் தங்களது வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்து வருகின்றனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் முழு மூச்சுடன் களமிறங்க உள்ளதாகவும் விஜய் தெரிவித்து உள்ளார்.
தற்போது விஜய்யின் தலைமை நிலைய செயலகத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கட்சியின் உட்கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பெயரில் வெளியான அறிக்கையில், " தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024, திங்கட்கிழமை) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முன்னர் 'தமிழக வெற்றி கழகம்' என்று இருந்த கட்சியின் பெயர், பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு தற்போது 'தமிழக வெற்றிக் கழகம்' ஆக மாற்றப்பட்டுள்ளது.
Next Gallery