ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டின் 2 அமர்வுகளில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தனித்துவமான கலை பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பல நாடுகளின் தலைவர்களுக்கு அரிய பரிசுகளை வழங்கினார்.
இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு பிரதமர் மோடி ராம் தர்பார் எடுத்துரைக்கும் கலை பொருளை வழங்கினார். GI-குறியிடப்பட்ட அரக்கு கலை வடிவம் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ளது.
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுக்கு பிரதமர் மோடி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட டோக்ரா கலையை பரிசாக அளித்துள்ளார்.
அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு நந்தி கருப்பொருளின் அடிப்படையிலான கலைப்பொருளை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகிக்கு மார்பிள் டேபிள் டாப்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸுக்கு, உலோகத்தில் அழகாக செதுக்கப்பட்ட பித்தளைப் பாத்திரத்தை பிரதமர் மோடி பரிசளித்துள்ளார். கையால் செதுக்கப்பட்ட பித்தளைப் பொருட்கள் மொராதாபாத் மாவட்டத்தின் தலைசிறந்த படைப்பாகும்.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் மோடி கருப்பு நிற அழகான பானைகளை பரிசாக வழங்கினார். இந்த கருப்பு பானைகள் உத்தரபிரதேச மாநிலம் நிஜாமாபாத்தில் தயாரிக்கப்படுகிறது.
பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு இளஞ்சிவப்பு நிற ஃபிஷ்நெட் ப்ரூச் மற்றும் கஃப்லிங்க் செட் ஒன்றை பரிசாக வழங்கினார். குலாபி மீனாகாரி என்பது உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியின் GI-குறியிடப்பட்ட கலை வேலைப்பாடாகும்.
செனகல் அதிபர் மேசி சவுலுக்கு, மூங்கில் வேலைப்பாடுகளால ஆன பொருட்களை மோடி பரிசாக வழங்கினார்.