IT Sent Notices To Property Buyers: வருமான வரிச் சட்டத்தின்படி, 50 லட்சம் அல்லது அதற்கு மேல் சொத்து வாங்குபவர்கள் மத்திய அரசுக்கு 1 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும். வாங்குபவரின் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு இணைக்கப்படவில்லை என்றால், அவர்கள் 1 சதவீதத்திற்கு பதிலாக 20 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும்
வருமான வரித் தாக்கல் சட்ட பிரிவு 139AA.,வின்படி வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம். ஆனால் பலர் ஆதாருடன் பான் எண்ணை இணைக்கவில்லை என்பதால் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
புதிய விதிகளின் கீழ் நூற்றுக்கணக்கான சொத்து வாங்குபவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருமான வரிச் சட்டத்தின்படி, 50 லட்சம் அல்லது அதற்கு மேல் சொத்து வாங்குபவர்கள் மத்திய அரசுக்கு 1 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும். வாங்குபவரின் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு இணைக்கப்படவில்லை என்றால், அவர்கள் 1 சதவீதத்திற்கு பதிலாக 20 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டியிருக்கும்
சொத்து விற்பனையாளர்களின் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்காததால், பலரின் பான் கார்டுகள் காலாவதியாகிவிட்டன. செயல்படாத பான் கார்டுகளை வைத்திருப்பவர்கள், சொத்து வாங்கும்போது, அதன் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், 20 சதவிகித டிடிஎஸ் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது
ஐடிஆரில் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். இன்னும் இரண்டையும் இணைக்காதவர்கள், தாமதக் கட்டணமாக ரூபாய் 1000 செலுத்தி பான் மற்றும் ஆதாரை இணைக்க முடியும்.
வருமான வரிச் சட்டத்தின்படி, 50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள சொத்துக்களை வாங்குபவர் மத்திய அரசுக்கு 1 சதவீத டிடிஎஸ் மற்றும் மொத்த செலவில் 99 சதவீதத்தை விற்பவருக்கு செலுத்த வேண்டும்.
ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான சொத்துக்களை வாங்கியவர்களுக்கு, 20 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வருமான வரிச் சட்டத்தின்படி, ஐடிஆரில் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2022 ஆகும்.
ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பது மிகவும் சுலபமானது. இந்திய வருமான வரி துறையின் அதிகாரபூர்வமான இணையத்தளத்திற்கு சென்று 1000 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். அல்லது SMS மூலமாக செய்யலாம். SMS மூலமாக 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மூலமாக PAN மற்றும் AADHAAR எண்ணை SMS அனுப்பலாம்
பான் கார்டு காலாவதியானர்கள் தங்கள் சொத்துக்களை 50 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக விற்றால் அவர்களுக்கும் 20% டிடிஎஸ் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.