தீபிகா பல்லிகல் - தினேஷ் கார்த்திக் சிறந்த புகைப்படங்கள்

கடந்த 2013 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக் மற்றும் தீபிகா பல்லிகல் இடையே திருமண நிச்சயம் செய்து கொண்டனர். இரண்டு வருடங்கள் பிறகு 2015 ஆம் ஆண்டு தீபிகாவின் மதமான கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் இருவருக்கும் திருமணம் நடத்தப்பட்டது.

 

இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஆறு மாதங்களுக்குள், உலக இரட்டையர் சாம்பியன்ஷிப்பில் கலப்பு இரட்டையர் மற்றும் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்ற தீபிகா பல்லிகல் மற்றும் அவரது கணவர் தினேஷ் கார்த்திக் புகைப்படங்கள். 

1 /8

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் இரண்டாவது மனைவியின் பெயர் தீபிகா பல்லிகல். இவரின் முதல் மனைவி நிகிதா இந்திய கிரிக்கெட் வீரர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.

2 /8

ஸ்குவாஷிற்காக தீபிகா பல்லிகலுக்கு பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது ஆகிய இரண்டு மதிப்புமிக்க விருதுகளால் அவர் கௌரவிக்கப்பட்டார்.

3 /8

தீபிகா அடிக்கடி தனது கவர்ச்சியான படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்வார்.

4 /8

தீபிகாவின் முதுகில் தினேஷ் கார்த்திக்கின் இனிஷியலான "டிகே" பச்சைக் குத்தியுள்ளார். 

5 /8

ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா, உலக ஸ்குவாஷ் மகளிர் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியர் ஆவார்.

6 /8

விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்குவாஷ் வீரரான அவரது மனைவி தீபிகா பல்லிகல் ஆகியோர் மனதைக் கவரும் தருணங்களைப் அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

7 /8

தீபிகா ஸ்குவாஷ் வீரராக மாறுவதற்கு முன்பு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். 

8 /8

பரிசுத் தொகையில் சமத்துவமின்மை காரணமாக 2012 மற்றும் 2015 ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க தீபிகா மறுத்துவிட்டார்.