Relationship Tips: நீங்கள் சொல்லும் விஷயங்களை உங்களின் திருமண பார்ட்னர் காது கொடுத்துக்கூட கேட்க மறுக்கிறார் என்றால், இந்த 4 வழிமுறைகளை பின்பற்றி அந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
திருமண உறவில் இரு தரப்பும் முறையாக பேசிக்கொள்வதும், ஒருவர் பேசுவதை மற்றொருவர் கேட்டு அதனை ஆழமாக உள்வாங்கி அவரின் பேச்சுக்கு மரியாதை அளிப்பதும் முக்கியம். இதில் பிரச்னை வரும்போது தம்பதியர் தங்களுக்கு இடையே இந்த சில வழிமுறைகளை பின்பற்றி தீவுகளை பெற்றுக்கொள்ளலாம்.
திருமண வாழ்வில் கணவன், மனைவி இருவரும் எவ்வித பிரச்னையும் இன்றி உறவை ஆரோக்கியமாக கொண்டுசெல்வது அவசியமாகும். பிரச்னை வந்தாலும் அவற்றை பேசித்தீர்த்துக்கொள்வதும் முக்கியமாகும்.
எனவே, தம்பதியர் தங்களுக்கு இடையே நல்ல பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ள வேண்டும். தகவல் தொடர்பும் முறையாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் பெரிய பிரச்னைகளே உறவில் வராது.
திருமண உறவில் நீங்கள் சொல்வதை உங்களின் பார்ட்னர் காது கொடுத்துக்கூட கேட்க மறுக்கிறார் என கோபம் வருகிறாத... அப்போது உடனே இந்த வழிமுறைகளை இருவரும் பின்பற்றி அந்த பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்.
பேசுவதற்கு சிறந்த நேரத்தையும், இடத்தையும் தேர்வு செய்துகொள்வது நல்லது. உங்கள் பார்ட்னர் அலுவலகத்தில் இருந்தோ அல்லது பணி முடித்து வந்த உடனேயோ நீங்கள் அவரிடம் அதிகம் பேசக்கூடாது. அவரை நிதானத்திற்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இருவரும் வேலைகள் இன்றி நிதானத்திற்கு வந்த பின்னர் உங்கள் படுக்கையறையிலோ அல்லது தோட்டத்திலோ இருவருக்கும் பிடித்த இடத்தில் நேரம் ஒதுக்கி பேச வேண்டும். இல்லையெனில் வெளியே வாக்கிங் சென்றோ, பூங்காவிற்கு சென்றோ கூட நீங்கள் நேரம் செலவிடலாம். இது நீங்கள் சொல்வதை அவரை காது கொடுத்துக் கேட்க தூண்டும்.
முதலில் நீங்கள் சொல்வதை அவர் கேட்க வேண்டும் என நினைத்தால், அவர் சொல்வதை நீங்கள் காது கொடுத்துக் கேளுங்கள். அதாவது உங்கள் பார்ட்னர் பேசும் கவனம் செதறாமல், அவரது கண்ணையே பார்த்துக்கொண்டிருப்பது, அவர் சொல்வதற்கு ஏற்ப தலையாட்டுவது ஆகியவற்றை செய்வதன் மூலம் நீங்கள் முழுமையாக கேட்கிறீர்கள் என அர்த்தம். நீங்கள் செய்வதையே பார்ட்னர் உங்களுக்கும் செய்வார் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
மேலும், எப்படி பேச வேண்டும் எனவும் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். சுவாரஸ்யமின்றி சுற்றி வளைத்து பேசினால் பார்ட்னர் உங்கள் பேச்சுக்கு கவனம் செலுத்துவது குறையும். எனவே, நீங்கள் இருவரும் எப்படி பேசிக்கொள்வது என்பது குறித்து திட்டமிட்டுக்கொண்டால் பிரச்னை வராது.
இருவருக்குள்ளும் இதனால் பிரச்னை அதிகமாக வருகிறது என்றால் உடனே அதுகுறித்த வல்லுநரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அதாவது உங்களுக்குள் இருக்கும் பிரச்னையை தீர்ப்பது தீர்க்க இது முக்கிய ஒன்றாகும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.