Jackie Chan : உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ஜாக்கி சான் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.
Jackie Chan : உளவாளி அப்பா, போதைப் பொருள் விற்பனையாளர் அம்மா ஆகியோரின் மகனாக பிறந்து உலகப் புகழ்பெற்ற நடிகராக மாறிய ஜாக்கி சானின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை இங்கே.
இன்று உலகப் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் ஜாக்கி சான் இளமைக்காலம் கொடுமைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்பா உளவாளியாகவும், அம்மா போதைப் பொருள் விற்பனையாளராகவும் இருந்ததால் இவரை குழந்தையிலேயே கைவிட்டுவிட்டனர்.
இதனால் ஆசிரமத்தில் வளர்ந்த ஜாக்கி சான், அங்கேயே தற்காப்பு பயிற்சி கலைகளைக் கற்றுக் கொண்டார். இதுகுறித்து அவர் பேசும்போது, இளம் வயதில் பெற்ற இந்த கடினமான பயிற்சிகளால் தான் தனக்கு வாய்ப்புகள் கிடைத்தாக கூறுகிறார்.
இளம் வயதில் உடுத்த சரியான உடை இருக்காது, ருசியாக சாப்பிட உணவுகள் இருக்காது என கூறும் ஜாக்கி சான், தன் குழந்தைகளுக்கும் என்னுடைய சொத்துகளை கொடுக்க மாட்டேன் என வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.
முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். அவருக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், அவரும் லெஸ்பியன் என அறிந்து தனக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அறிவித்துவிட்டார்.
மற்றொரு திருமணம் செய்து கொண்ட ஜாக்கி சானுக்கு மகன் இருக்கிறார். ஆனால் அவரும் போதைப் பொருள் விவகாரத்தில் 6 மாதம் சிறைவாசம் செல்ல, நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கேட்டார் ஜாக்கி சான்.
ஏனென்றால் 2009 ஆம் ஆண்டு முதல் போதைப் பொருள் தடுப்பு குறித்த தூதராக ஜாக்கி சான் இருந்து வருகிறார். அவருடைய மகனே போதைப் பொருள் உபயோகத்தில் சிக்கி சிறை சென்றதால் இந்த மன்னிப்பை கேட்டார்.
மேலும், தன்னுடைய மகனுக்கும் என் சொத்தில் பங்கு கொடுக்க மாட்டேன், அவருக்கு திறமை இருந்தால் அவரே சம்பாதித்துக் கொள்ளட்டும் என்றும் கூறிவிட்டார்.
ஜாக்கிசான் 8 உலக மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். இதனால் அவருக்கு கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் பல கின்னஸ் சாதனைகளையும் ஜாக்கி சான் படைத்திருக்கிறார்.
சினிமாவில் பல சாதனைகள் படைத்தபோதும் உலக சினிமாவின் மிகப்பெரிய அங்கீகார விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஒருமுறைகூட அவருக்கு கொடுக்கப்படவில்லை.
ஜாக்கி சான் அடிக்கடி சொல்வது என்னவென்றால் ஒரு விஷயதிதல் பயிற்சி, முயற்சி, செயல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் எத்தகைய விஷயத்தில் வெற்றி பெற்றுவிடலாம் என்கிறார்.