ஓய்வு பெற்ற முன்னாள் அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை

Pensioners Grievance Special Camp: ஓய்வு பெற்ற முப்படையினர் குடும்பத்திற்கு விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை

Family Pension Latest News: ஓய்வு பெற்ற முன்னாள் அரசு ஊழியர்கள் குடும்ப ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.

1 /7

தஞ்சாவூர் ஸ்பார்ஸ் திட்டத்தின் கீழ் முப்படை (ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரர்களுக்கு வருடாந்தர உயிர்ச்சான்று அடையாளம் காணவும், ஓய்வூதியதாரர்களின் குறைகளை தீர்க்கவும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டார். 

2 /7

ஓய்வூதியதாரர்களின் குறைகளை தீர்க்கவும் சிறப்பு முகாம் தலைமை வகித்து சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் பேசும் போது, முப்படைகளில் பணியாற்றை ஓய்வு பெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம் செய்தால் உடனடியாக அதனை பரிசீலனை செய்து 48 மணி நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும். 

3 /7

டிஜிட்டல் மூலம் ஓய்வூதியம் பெற்றுத் தருகிறோம் என்று கூறியும், செல்போன் ஓடிபி எண் தாருங்கள் எனக் கேட்டும் ஓய்வூதியதாரர்களை குறிவைத்து சிலர் மோசடி செய்து வருகிறார்கள். எனவே யாருக்கும் ஓடிபி எண்ணை கொடுக்க வேண்டாம் என எச்சரித்தார். சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேரில் வந்து மட்டும் ஓடிபி எண்ணை வழங்க வேண்டும். 

4 /7

தமிழகத்தில் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான எந்த கோரிக்கை மனுக்களும் தற்போது நிலுவையில் இல்லை. இதுபோன்ற குறைதீர் முகாம்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 

5 /7

ஓய்வூதியம் பெறுபவர்கள் இறந்துவிட்டால், அவர்கள் உறவினர்கள் இறப்பு சான்றிதழைப் பெற்று எங்களுக்கு செல்போனில் அனுப்பி வைத்தால், நாங்கள் அவர்களது குடும்பத்தினர் தொடர்பு கொண்டு குடும்ப ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

6 /7

தமிழகத்தில் 210 லட்சம் ஓய்வூதிதாரர்களும், தஞ்சாவூரில் 6,000 ஓய்வூதிதாரர்களும் உள்ளனர். இவர்களில் 60,000 குடும்ப ஓய்வூதியம் பெறுகிறார்கள். இவர்களுக்கான குறைதீர் சேவை மையம் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. 

7 /7

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என்று எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும், அந்தந்த மொழிகளில் பேசி குறைகளை தீர்க்க உரிய தீர்வு வழங்கப்படும்.