Sun & Son Of Sun Saturn Enmity : நவகிரகங்களின் ராஜாவான சூரியனின் வீட்டை, அவரது மகன் சனீஸ்வரர் நேர்பார்வையில் பார்த்தால், அப்பாவின் அருட்பார்வையும் வேலை செய்யாது. முழு அசுபரான சனியின் பார்வையே நல்லபலன்களை பஸ்பமாக்கிவிடும்...
நல்ல வலிமையுடன் இருக்கும் குரு பார்த்த சனியின் பார்வை, நல்ல பலன்களைக் கொடுக்கும். சனியை, சந்திரன் நேருக்கு நேர் பார்த்தால், சனியின் பார்வைக்கு சுப பலன்களைக் கொடுக்கும் வலிமை கிடைத்து விடும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது...
நவகிரகங்களில் முழு அசுபர் சனீஸ்வரர் மட்டும் தான்... சனி ஒரு முழுமையான இருள் கிரகம் எனப்தும், அவர் தான் நிற்கும் வீட்டையும், தான் பார்க்கும் வீடுகளையும், கிரகங்களையும் வலிமை குன்ற செய்வார் என்பதால் தான் சனி என்ற பேரைக் கேட்டாலே பலரும் பயப்படுகின்றனர்
சனியின் பார்வை மிகவும் மோசமானதாகும். சனி பார்வை சர்வ நாசம் என்பதும் அதனால் தான், ஒரு ஜாதகத்தில் சனீஸ்வரர் குறைவான கிரகங்களைப் பார்த்தால் நல்லது என்று சொல்வார்கள்
கிரகங்கள் அனைத்தும், தான் இருக்கும் வீட்டிலிருந்து ஏழாம் வீட்டைப் பார்க்கும் என்பதில் மூன்று கிரகங்களுக்கு மட்டும் விலக்கு உண்டு. சனி, செவ்வாய் மற்றும் குருவுக்கு மட்டும் 7 ஆம் பார்வையைத் தவிர இரண்டு 2 விசேஷ பார்வைகளும் உண்டு. சனீஸ்வரருக்கு, 3, 7,10 ஆகிய வீடுகள் என்றால், செவ்வாய், 4, 7, 8 ஆகிய வீடுகளையும், குரு 5,7, 9 ஆகிய வீடுகளைப் பார்ப்பார்கள். கிரகங்களின் பார்வையும் ஜாதகத்தில் முக்கிய பங்கு வகிக்கும்
கும்பத்திலும் மகரத்திலும் சனி ஆட்சி பலத்துடன் நிற்கும் போதும், துலாத்தில் உச்ச பலத்துடன் நிற்கும் போதும் சனீஸ்வரரின் பார்வைக்கு வலிமை அதிகமாக இருக்கும்
சனியுடன் ராகு சேர்ந்தால் சனியின் பார்வை அதிக தீய பலன்களைக் கொடுக்கும்
சனி பொதுவாக 6, 8, 12 வீடுகளில் மறைவது நல்லது. அப்போது தான், அதன் பார்வையின் தீய பலன்கள் குறையும். எனினும் சனி, பகை நீச்சம் பெறாமல் நட்பு நிலையில் இருப்பது நல்லது
சனி சூரியனுடன் மிகவும் அருகில் நெருங்கி அஸ்தங்கம் ஆகும் போது, சனியின் பார்வை பலம் குறையும் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள்
பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது