எச்சரிக்கை.... தேனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத சில உணவுகள்

Honey Side Effects: தித்திக்கும் தேன் பசியையும் ருசியையும் கொடுக்கக்கூடியது. ஆயுர்வேதத்திலும் சித்த வைத்தியத்திலும், தேன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்ட தேனை, சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

தேனின் ஆரோக்கிய நன்மைகளை ஒரு பெரிய பட்டியலாகவே போடலாம். கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது முதல், வாயு தொல்லைக்கு நிவாரணம், நோய் எதிர்ப்பு சக்தி அளித்தல் என இதன் நன்மைகள் ஏராளம்.

1 /7

தேனின் மருத்துவ பண்புகள்: மருத்துவ பண்புகள் நிறைந்த தேன், எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொடுப்பது என்றாலும், அவற்றை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவு ஏற்படும் என்று உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2 /7

தேன் மற்றும் பூண்டு: தேன் பூண்டு இரண்டுமே வைரல் எதிர்ப்பு பண்புகள் கொண்டவை. வைரல் தொற்று நோய்களை எதிர்க்க வல்லவை. ஆனால் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால், செரிமான பிரச்சனை, வாயுத்தொல்லை உருவாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

3 /7

தேன் மற்றும் சுடுநீர்: தேனை வெதுவெதுப்பான நீர் கலந்து சாப்பிடுவதால் நன்மை கிடைக்கும். ஆனால் கொதிக்க வைத்த நீரை கலந்து சாப்பிடுவதால், அது இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அழிந்து போவதோடு சுவையும் பாதிக்கப்படும். மேலும் செரிமான பிரச்சனைகளும் ஏற்படும்.

4 /7

தேன் மற்றும் மீன் உணவு: இறைச்சி உணவுகளுடன் தேனை கலக்காமல் இருப்பது நல்லது. குறிப்பாக மீன் உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சி சாப்பிடும் போது தேன் சாப்பிட கூடாது. இரண்டுக்கும் இடையில் குறைந்தது அரை மணி நேரம் இடைவெளி தேவை. இல்லை என்றால் நெஞ்செரிச்சல் வயிற்றுப் போக்கு போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

5 /7

தேன் மற்றும் வெள்ளரிக்காய்: தேன் மற்றும் வெள்ளரிக்காயை சேர்த்து சாப்பிடுவதால், சரும பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறுகின்றனர் ஆரோக்கிய வல்லுனர்கள். எனினும், இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடும் பழக்கம் பொதுவாக இல்லை என்பது நிம்மதியளிக்கும் விஷயம். 

6 /7

தேன் ஆரோக்கிய நன்மைகள்: எனவே எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்ட தேனை சாப்பிடும் போது, மேலே கூறப்பட்டுள்ள பொருட்களை கலக்காமல் பார்த்துக் கொள்ளவும். முறையாக சாப்பிடும் போது தேன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். உடலில் இருந்து நச்சுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுவதில் இருந்து, சருமத்தை தெளிவாக வைத்துக் கொள்வது, உடல் பருமனை குறைப்பது, பலவீனமானவர்களின் உடலுக்கு வலிமை அளிப்பது என இதில் அடங்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.