உலகக் கோப்பை இவர்களில் ஒருவருக்கு தான் - 10 அணிகளின் கேப்டன்கள் யார் யார்?

World Cup 2023 Capatins: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், அனைத்து அணிகளின் கேப்டன்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

  • Oct 04, 2023, 17:01 PM IST

World Cup 2023: அடுத்த 45 நாள்கள் நடக்க உள்ள கிரிக்கெட் திருவிழா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதில், நவ. 19ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்த 10 பேரில் ஒருவரின் கையில் தான் உலகக் கோப்பை தவழும். 

 

 

 

 

 

 

1 /10

Jos Butler: நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜாஸ் பட்லர் செயல்படுகிறார். இவரின் தலைமையில் கடந்தாண்டு ஐசிசிச டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது. 

2 /10

Kane Williamson: கடந்த உலகக் கோப்பையில் இரண்டாம் இடம்பிடித்த போது, நியூசிலாந்தை வழிநடத்திய கேன் வில்லியம்சனே இந்த உலகக் கோப்பை தொடரிலும் கேப்டனாக செயல்படுகிறார். இவரின் தலைமையில் 2021இல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அந்த அணி வென்றது.   

3 /10

Rohit Sharma: தொடரை நடத்தும் இந்தியாவின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுகிறார். இதுவரை எந்த ஐசிசி கோப்பையையும் இவர் தலைமையில் இந்தியா வெல்லவில்லை. கடந்த மாதம் ஆசிய கோப்பையை இந்தியா வென்றிருந்தது, ரோஹித் தலைமையில்தான்.   

4 /10

Pat Cummins: 5 முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் சாம்பியனான ஆஸ்திரேலியா அணிக்கு பாட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுகிறார். இந்தாண்டு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பை இவரின் தலைமையில் ஆஸ்திரேலியா வென்றது குறிப்பிடத்தக்கது.

5 /10

Babar Azam: பாகிஸ்தான் அணிக்கு உலகின் நம்பர் 1 பேட்டர் பாபர் அசாம் கேப்டனாக செயல்படுகிறார். கடைசியாக 1996இல் பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றிருந்தது.  

6 /10

Dasun Shanaka: 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பை சாம்பியனான இலங்கை அணியை இம்முறை தசுன் ஷனகா தலைமை தாங்குகிறார்.

7 /10

Temba Bavuma: இதுவரை ஐசிசி கோப்பையை வென்றிராத தென்னாப்பிரிக்காவுக்கு டெம்பா பவுமா கேப்டனாக உள்ளார். 

8 /10

Shakib Al Hasan: உலகின் முன்னணி ஆல்-ரவுண்டரான ஷகிப் அல்-ஹாசன் வங்கதேச அணியை வழிநடத்துகிறார். 

9 /10

Hashmatullah Shahidi: ஆப்கானிஸ்தான் அணியின் இடதுகை பேட்டர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி இந்த உலகக் கோப்பையில் அந்த அணியின் கேப்டனாக செயல்படுகிறார். 

10 /10

Scott Edwards: தகுதி சுற்று மூலம் தொடருக்குள் வந்த நெதர்லாந்து அணிக்கு ஸ்காட் எட்வார்ட்ஸ் கேப்டனாக உள்ளார்.