தீபத் திருநாளாக கொண்டாடப்படும் தீபாவளியை கொண்டாடுவதற்கு முன்னரே, செல்வத்தை அள்ளித் தரும் அன்னை மகாலட்சுமியையும், செல்வத்தின் அதிபதியான குபேரரையும் பூஜிக்க வேண்டும்...
செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாய் அன்னை மகாலட்சுமி பிறந்த நாள், தந்தேராஸ் தினத்தன்று பாற்கடலில் இருந்து உதித்தவர். அந்த நாளில் அன்னை லட்சுமியுடன் குபேரரையும் வணங்குவது செல்வத்தை வீட்டில் நிரந்தரமாக தக்க வைக்கும்...
அன்னை மகாலட்சுமி பிறந்த நாளான தந்தேராஸ் இந்து மதத்தில் மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு மகாலட்சுமியின் பிறந்தநாள் அக்டோபர் 29ம் தேதியன்று வருகிறது
தீபாவளி நாளன்று மாலை லட்சுமி குபேரர் பூஜை செய்வது சிறப்பு என்றாலும், தந்தேரஸ் நாளில் அன்னையை வழிபடுவது சிறப்பு. லட்சுமியை வணங்கும்போது, குபேரரையும் சேர்த்து வணங்குவது செல்வத்தை கொண்டு வந்து சேர்க்கும்
தந்தேரஸ் சுபநாளில், அன்னை லட்சுமிக்கும் தன்வந்திரிக்கும் பூஜை செய்யப்படுகிறது. ஐப்பசி மாதத்தின் தேய்பிறையில் வரும் திரயோதசி தினத்தில் லட்சுமி அவதரித்த நாள். இந்த நாளில் தங்கம், வெள்ளி, பாத்திரங்கள் மற்றும் நகைகளை வாங்குவது சுபமானதாக கருதப்படுகிறது.
திருபாற்கடலைக் கடைந்தபோது, தன்வந்திரி பகவான் தோன்றினார். அவர் கைகளில் அமிர்தம் நிறைந்த ஒரு பித்தளை கலசம் இருந்தது. எனவே தந்தேராஸ் நாளன்று பாத்திரங்கள் வாங்குவார்கள், பாத்திரம் வாங்குவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரும் என்பது நம்பிக்கை
திருபாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த ஸ்ரீதேவியான மஹாலஷ்மியை ஸ்ரீமஹாவிஷ்ணு திருமணம் புரிந்தார். தந்தேராஸ் தினத்தில் லக்ஷ்மி பூஜை செய்தால், அன்னை மகாலட்சுமியும் அவரை மார்பில் ஏந்தியிருக்கும் விஷ்ணுவும் அருள் புரிவார்வார்கள்.
தீபாவளியில் முறைப்படி பூஜை செய்தால் குபேரனின் அருளைப் பெற்று பண கஷ்டம் நீங்கி, மகாலட்சுமியின் அருளோடு சிறப்புடன் இருக்கலாம்
தீபாவளி நாளன்று (அக்டோபர் 31) மாலை 06.00 மணிக்கு மேல் நவம்பர் 01 - மாலை 05 மணி முதல் 06.30 மணிக்குள் லக்ஷ்மிக்கு பூஜைகள் செய்யலாம்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது