Viduthalai Part 2 Box Office Collection : வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 2 திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் பெற்றுள்ளது எனபதை இங்கு பார்ப்போம்.
Viduthalai Part 2 Box Office Collection : மக்கள் மத்தியில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம், விடுதலை பாகம் 2. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம், 3 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு என்பதை பார்ப்போம்.
விடுதலை 2 திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதியன்று வெளியானது. இதுவரை தோல்வி பெறாத இயக்குநர் என்ற பெயரை பெற்ற வெற்றிமாறன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
விடுதலை முதல் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, அடுத்த பாகத்தில் அவர்களுடன் சேர்ந்து மஞ்சு வாரியரும் நடித்திருக்கிறார்.
ஒரு சிலருக்கு விடுதலை படத்தின் முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம்தான் மிகவும் பிடித்திருப்பதாக விமர்சனங்கள் வெளியானது.
விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாள் வசூல் அதிகமாக இருந்தது. தற்போது மூன்றாம் நாள் வசூல் விவரமும் வெளியாகியுள்ளது.
இப்படம் இதுவரை சுமார் ரூ.30 கோடி வரை கலக்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதை கேள்வி பட்டவர்கள், நல்ல படத்திற்கு இதுவரை இவ்வளவுதான் வசூலா என்று கேட்டு வருகின்றனர்.
இந்த வசூல் விவரம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
விடுதலை 2 படம், ஏ சான்றிதழ் பெற்றிருப்பதால் குடும்பமாக ரசிகர்களால் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.