ராகு பெயர்ச்சி 2025: நிழல் கிரகமான ராகு 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில் தனது ராசியை மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகப் போகிறார். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, எப்போதும் வக்ர நிலையில் பயணிக்கும் ராகு 18 ஆண்டுகளுக்கு பிறகு 2025 மே மாதத்தில் சனியின் ராசியான கும்பத்தில் நுழைவார்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ராகு-கேது எப்போதும் எதிர் திசையில், அதாவது வக்ர நிலையில் தான் நகர்கின்றனர். இந்நிலையில், 2025ம் ஆண்டு ராகுவின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ராகுவின் இந்த சஞ்சாரத்தால், தொழில் முன்னேற்றத்துடன், வியாபாரத்தில் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
ராகு - சுக்கிரன் : 2025ஆம் ஆண்டில் ராகு பெயர்ச்சியினாலும், அதற்கு முன்னதாக 2025 ஜனவரி 28ம் தேதி மீன ராசியில் சுக்கிரன் நுழையும் போது, ராகு கிரகம் ஏற்கனவே மீனத்தில் உள்ள நிலையில் இரண்டு கிரகங்களின் சேர்க்கை காரணமாக மிகவும் அரிதான யுதி யோகம் உண்டாகும். ராகு சுக்கிரனின் சீடனாகக் கருதப்படுவதாலும், இரண்டு நட்பு கிரகம் என்பதாலும், கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் பிறக்கும்.
ரிஷபம்: 2025ம் ஆண்டு ராகுவின் பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு சாதகமாக இருக்கும். தன்னம்பிக்கை வலுப்பெறும். வியாபாரம் சம்பந்தமாக போட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேறும். கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறலாம். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் உண்டாகும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மனைவியுடன் உறவு இனிமையாக இருக்கும்.
கன்னி: ராகுவின் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகவும் சாதகமாகவும் கருதப்படுகிறது. மன அமைதி ஏற்படும். பணியிடத்தில் சில பெரிய பொறுப்புகளை பெறலாம். 2025 ஆம் ஆண்டில் பொருளாதார நிலையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். வருமானத்தில் அபரிமிதமான உயர்வு இருக்கும். பணம் சம்பாதிக்க பல வழிகள் தெரியும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கை அமையும்.
தனுசு: ராகுவின் சஞ்சாரம் தனுசு ராசிக்காரர்களுக்குமங்களகரமானதாகவும், நன்மை தருவதாகவும் கருதப்படுகிறது. புத்தாண்டில் உங்கள் இலக்குகளை எளிதாக அடையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். பணம் சம்பாதிக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கும். மாணவர்கள் தங்கள் தொழிலில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். வியாபாரம் செய்பவர்கள் அற்புதமான பொருளாதார முன்னேற்றத்தைக் காணலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.
கும்பம்: ராகு 18 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசிக்குள் நுழையப் போகிறார். எனவே, ராகுவின் இந்த சஞ்சாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புத்தாண்டில் பல வருமான ஆதாரங்கள் உருவாகும். அற்புதமான நிதிப் பலன்களைப் பெறலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு சாதகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வுடன் சம்பள உயர்வின் பலனைப் பெறலாம். குடும்ப மகிழ்ச்சி அடைவீர்கள்.
நவகிரகங்களில் பாம்புத் தலை கொண்ட ராகு, ராகுவின் நிலை வலுவாக இருந்தால் அந்த ஜாதகர் பணக்காரராக இருப்பார். அதே நேரம் மனதில் ஆசைகளை தூண்டி பிரச்சனையைக் கொடுப்பவர். ஜாதகத்தில் அதுவே ராகுவின் நிலை மோசமானதாக இருந்தால் ஆரோக்கியம் பாதிக்கும். தீவிர நோய்கள் ஏற்படும். சில சமயங்களில் மருந்துகள் கூட பலனளிக்காது. மனம் குழப்பமாக இருக்கும். குடும்ப உறவுகள் பாதிக்கும்.
ராகு தோஷம் நீங்க பரிகாரங்கள்: வீட்டில் நவகிரக ஹோமம் செய்யலாம். ராகு மந்திரமான "ஓம் ராம் ராஹவே நமஹ" ("ॐ रां राहवे नमः") என்ற மந்திரத்தை, தினமும் 108 முறை ஜபித்து வர ராகுவின் பாதக பாதிப்புகள் குறையும். வெள்ளி ராகுவுக்கு உகந்த உலோகம். எனவே. வெள்ளி ஆபரணங்களை அணிவதும், வெள்ளிப் பாத்திரத்தில் உணவு உண்பது ஆகியவை ராகு தோஷத்தால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும். ராகு காலத்தில் துர்க்கை அன்னம் சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றலாம்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.