தயாரிப்பாளர்/இயக்குனர் ஆகாஷ் - தரணீஸ்வரி திருமணம் கடந்த வியாழக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஆகாஷ் Dawn Pictures நிறுவனத்தின் சார்பில் தனுஷ் நடித்து இயக்கும் 'இட்லி கடை' படத்தை தயாரித்தும், நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனராகவும் உள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. தமிழக முதமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தொடங்கி, பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த திருமண நிகழ்ச்சியில் சமீபத்திய சர்ச்சையில் சிக்கிய தனுஷ் மற்றும் நயன்தாரா ஒரே நேரத்தில் கலந்து கொண்டனர். இருவரும் எதிர் எதிரே அமர்ந்து இருந்த படங்கள் வைரல் ஆனது.
இன்று ஆகாஷ் - தரணீஸ்வரி ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தனுஷ் மற்றும் சிலம்பரசன் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தனுஷ் மற்றும் சிம்பு இடையே நீண்ட கால பிரச்சனை இருக்கிறது என்று கூட்டப்பட்டாலும் இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.