தினமும் சாப்பிடும் இந்த உணவுகளிலும் சுகர் மறைந்திருக்கும்... பாத்து சாப்பிடுங்க!

Lifestyle News: உடல் எடை குறைப்பில் ஈடுபட்டிருப்போர் சிலர் சுகரை குறைவாக சாப்பிட திட்டமிட்டிருப்பார்கள். ஆனால், பொதுவாக உண்ணப்படும் இந்த 7 உணவுகளிலும் சுகர் அதிகம் இருக்கும்.

அதிக இனிப்புகளை உட்கொள்வது உடல் எடை குறைப்பை தாமதப்படுத்தும். எனவே, அதில் கவனமாக இருப்பது நல்லது.  

 

1 /8

பிரெட்: பால் பிரேட், முழு தானிய பிரேட் ஆகியவற்றில் நிச்சயம் மறைமுகமாக சுகர் இருக்கும். எனவே, உடல் எடை குறைப்போர் அதில் கவனம் செலுத்தவும்.   

2 /8

மியூஸ்லி: காலையில் நீங்கள் டயட்டிற்காக சாப்பிடும் மியூஸ்லி, Cereals ஆகியவற்றிலும் சுகர் மறைந்திருக்கும். எனவே அதனை அதிகமாக உட்கொள்ளாதீர்கள்.  

3 /8

யோகர்ட்: இது ஆரோக்கியமான உணவாக பார்க்கப்பட்டாலும் இதிலும் குறிப்பிட்ட அளவு சுகர் இருக்கும். எனவே, இதிலும் கவனமாக இருக்கவும்.  

4 /8

ஐஸ் டீ: இனிப்புகள் சேர்க்கப்படாத ஐஸ் டீயிலும் கூட குறிப்பிடத்தக்க அளவு இனிப்புகள் இருக்கும்.   

5 /8

கெச்அப்: நீங்கள் உணவுக்கு தொட்டுக்கொள்ளும் இந்த கெச்அப்களிலும் சுகர் அதிகம் இருக்கும்.   

6 /8

எனர்ஜி குடிபானம்: ஜிம் செல்பவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கென தயாரிக்கப்படும் இந்த குடிபானங்களில் கூட உங்களின் ஆற்றலை அதிகரிக்க அதிக சுகர் உள்ளது.   

7 /8

கடலைமிட்டாய்: பெரும்பாலு் இதில் செயற்கை இனிப்புகளும், சுகர்களும் சேர்க்கப்படுவதால் இதிலும் கழனமாக இருக்கவும்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இவை பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. இதனை Zee News உறுதிசெய்யவில்லை.