மீனாவை போன்றே இளம் வயதில் கணவனை இழந்த நடிகைகளின் பட்டியல்

மீனாவை போன்றே இளம் வயதில் கணவனை இழந்த நடிகைகளின் பட்டியல்

1 /6

நடிகை மீனா, திரையுலகில் கொடிகட்டி பறந்த இவர் கடந்த 2009ஆம் ஆண்டு  ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் உடல்நலக்குறைவால் அவர் நேற்று காலமானார். 

2 /6

நடிகை டிஸ்கோ சாந்தி, இவர் 1996-ல் நடிகர் ஸ்ரீஹரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து அவர் கடந்த 2013-ஆம் ஆண்டு காலமானார்.  

3 /6

நடிகை கனகா, கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமான இவர் கடந்த 2007ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த முத்து குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த 15வது நாளே காணாமல்போன முத்துகுமார் என்னவானார் என்ற தகவல் இன்று வரை இல்லை.  

4 /6

நடிகை ரோகிணி, இவர் கடந்த 1996-ஆம் ஆண்டு நடிகர் ரகுவரனை திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு ரகுவரன் உயிரிழந்தார்.   

5 /6

நடிகை மெளனிகா, இவருடைய கணவர் பிரபல இயக்குனர் பாலுமகேந்திரா. இவர்கள் கடந்த 1998-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இதனை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு பாலுமகேந்திரா காலமானார். 

6 /6

நடிகை பானுப்ரியா, 1983-ஆம் ஆண்டு மெல்ல பேசுங்கள் படம் மூலமாக திரையுலகில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து, கடந்த 1988ஆம் ஆண்டு ஆதஸ் கவுசல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து ஆதஸ் கவுசல் கடந்த 2008ஆம் ஆண்டு உயிரிழந்தார்.