செவ்வாய் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர வாழ்க்கை, சுப யோகம் ஆரம்பம்

Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி, மேஷம் மற்றும் விருச்சிகத்தின் அதிபதியான செவ்வாய், வீரம், தைரியம், வலிமை, வீடு, மனை, ஆற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார். செவ்வாயின் ராசி மாற்றம் ராசிகளின் இந்த அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். 

Sevvai Peyarchi Palangal: செவ்வாய் இன்று மாலை 5:42 மணிக்கு பெயர்ச்சியாகப் போகிறார். இவர் கும்ப ராசியில் பெயர்ச்சி ஆவார். கும்பத்தில் ஏற்கனவே சுக்கிரனும் சனியும் உள்ளார்கள். இவர்களுடன் செவ்வாயும் இணைவதால் கும்பத்தில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சிலருக்கு நல்ல விளைவுகளும் சிலருக்கு பிரச்சனைகளும் ஏற்படும். செவ்வாய் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /13

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள். வருமானம் அதிகமாகும், படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

2 /13

ரிஷபம்: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். சொத்து தொடர்பான சர்ச்சைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் தொழில் வாழ்க்கையில் உங்களுக்கு அதிக வேலை அழுத்தம் இருக்கும். குடும்பத்திலும் நீங்கள் நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்துக் கொள்ளுங்கள்.

3 /13

மிதுனம்: இந்த காலத்தில் குடும்பத்தாருடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. கல்வி அல்லது வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல விரும்பும் இந்த ராசிக்காரர்களின் விருப்பம் இக்காலக்கட்டத்தில் நிறைவேறும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுdan புரிதல் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். 

4 /13

கடகம்: செவ்வாய் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் வாழ்வில் மாற்ற்றம் ஏற்படும். வேலை அல்லது இருப்பிட மாற்றம் இருக்கலாம். குழந்தைகளில் எதிர்காலம் குறித்தும் கவலை ஏற்படலாம். நிதி விஷயங்களில் கவனம் தேவை, இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில், உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தவும். சர்ச்சையிலிருந்தும் விலகி இருங்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும், குடும்பத்தாருடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. 

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் ராசி மாற்றத்தால் நல்ல நேரம் பிறக்கும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உருவாகியுள்ளது. திருமண வாழ்வில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடலாம், ஆனால் நிலைமை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் அழுத்தத்தை சந்திக்க நேரிடும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. 

6 /13

கன்னி: வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் அதிக லாபம் கிடைக்கும். இப்போது நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆற்றல் அதிகமாக இருக்கும். அனைத்து பணிகளையும் உற்சாகத்துடன் செய்து முடிக்கலாம். கூட்டு வணிகம் செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும், இதில் அதிக பணம் ஈட்ட வாய்ப்பிருக்கும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். 

7 /13

துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் அழுத்தம் இருக்கும், இதன் காரணமாக நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்வில் கணவன் மனைவி இடையே புரிதல் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. உறுதியுடன் செயல்பட்டால் அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம்.

8 /13

விருச்சிகம்: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் லாபம் தடைபடலாம். நிதி நெருக்கடி உருவாகலாம். வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடலாம், மேலும் உங்கள் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியையும் சந்திக்க நேரிடும். பணி இடத்தில் வேலை பளு அதிகர்க்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். 

9 /13

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். உங்கள் வணிக நம்பகத்தன்மையும் அதிகரிக்கும். இந்த நேரத்தில், நீங்கள் போதுமான பணம் சம்பாதித்து அதை சேமிக்கும் நிலையில் இருப்பீர்கள். வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு பல வாய்ப்புகள் வரும், இது எதிர்காலத்திற்கு லாபகரமானதாக இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவ தயாராக இருப்பார்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். 

10 /13

மகரம்: மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வர வாய்ப்புள்ளது. தந்தையின் ஆதரவு கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்களுக்கு சில சவால்கள் வரும். நண்பர்களின் ஒத்துழைப்பு இந்த காலத்தில் அதிகமாக இருக்கும். குடும்பத்தாரின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும். வேலையை மாற்ற வாய்ப்புள்ளது.

11 /13

கும்பம்: இந்த நேரத்தில், உங்கள் வாழ்க்கையின் நோக்கம் விரிவடையும், நீங்கள் நீண்ட பயணத்தையும் மேற்கொள்ளலாம். வேலையில் வெற்றி பெறுவதோடு உயர் பதவியையும் பெறுவீர்கள். பேச்சில் கவனம் தேவை. கோபம், விரோதம் ஆகியவற்றை களைந்து அனைவரிடமும் சகஜமாக பழகுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்

12 /13

மீனம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றும் வியாபாரிகள் செவ்வாய் பெயர்ச்சி காலத்தில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். ஆன்மீக செயல்களின் நாட்டு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பல புதிய செயல்களை இந்த காலத்தில் செய்து பார்ப்பீர்கள்

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.