கரண்ட் பில் கம்மியா வரணுமா? அப்போது உடனே இதை செய்யுங்க

நீங்கள் உங்கள் வீட்டின் கரண்ட் செலவை குறைக்க வழிகளை தேடுகிறீர்களா..? இதோ உங்களுக்கான டிப்ஸ்.

சாதாரண மக்களுக்கு, அதிக மின் கட்டணம் அவர்களின் மாதாந்திர பட்ஜெட்டையும் அசைக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மின்சார கட்டணத்தை குறைக்கக்கூடிய சில முக்கிய குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு கொண்டு வந்துள்ளோம். சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் பெரிய வித்தியாசத்தைக் காண்பீர்கள்.

1 /6

வீட்டின் கரண்ட் செலவை குறைக்க வழிகள்: கரண்ட் பில்லை குறைக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய முதல்படி உங்களால் முடிந்தவரை மின்சாரம் வீணாவதை தவிர்க்க வேண்டும். இது தவிர உங்கள் மின்சார கட்டணத்தை குறைக்க உதவும் சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

2 /6

BLDC சோலார் ஃபேன்களுக்கு மாறவும்: BLDC ஃபேன்கள் படிப்படியாக மிகவும் பிரபலமாகி வருகின்றனர். இவை மிகவும் ஆற்றல் திறன் கொண்டவை. ஏனெனில், அவை நேரடி மின்னோட்ட மின்சாரத்தில் செயல்படும் தூரிகை இல்லாத நேரடி மின்னோட்ட மோட்டார்களைக் கொண்டுள்ளன. இத்தகைய ஃபேன்கள் 60 சதவீதம் வரை மின்சாரத்தைச் சேமிக்கின்றன.

3 /6

LED லைட்களுக்கு மாறவும்: உங்கள் வீட்டில் இன்னும் CFL மற்றும் பழைய பல்புகள் இருந்தால். அவற்றை உடனடியாக கழட்டி உடனடியாக எல்இடி பல்புகளை மாற்றவும். ஏனெனில், அவை மிகவும் ஆற்றல் திறன் கொண்டவை மற்றும் அவை அதிக வெளிச்சத்தையும் அளிக்கின்றன. மேலும் இது மின்சாரத்தைச் சேமிக்கின்றன.

4 /6

BEE ரேட்டிங்:BEE ஸ்டார் லேபிள்கள் BEAU of Energy Efficiency (BEE) மூலம் வழங்கப்படுகின்றன. இது சாதனத்தின் ஆற்றல் செயல்திறனை வரையறுக்கிறது. இந்த லேபிளில், நட்சத்திரங்கள் மூலம் மதிப்பீடு வழங்கப்படுகிறது. சாதனத்தின் மதிப்பீடு அதிகமாக இருப்பதால், தயாரிப்பு அதிக ஆற்றல் திறன் கொண்டது. இத்தகைய சூழ்நிலையில், 5 நட்சத்திர மதிப்பீட்டில் ஒரு சாதனத்தை வாங்கினால், அதிக மின்சாரத்தை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

5 /6

பயன்படுத்தாத போது சாதனங்களை ஆஃப் செய்யலாம்: மின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான மிக அடிப்படையான மற்றும் பயனுள்ள எளிய வழி பயன்படுத்தாத போது சாதனங்களை ஆஃப் செய்து வைப்பது. லைட்கள், ஃபேன்கள், வீட்டு உபகரண சாதனங்கள் உள்ளிட்டவற்றை நீங்கள் பயன்படுத்தவில்லை அல்லது உங்களுக்கு இப்போது அதன் அவசியம் தேவை இல்லை என்று உணர்ந்தால் அவற்றை உடனடியாக ஆஃப் செய்து விடுங்கள்.

6 /6

24 டிகிரியில் ஏசியை இயக்கவும்: கோடை மற்றும் மழைக்காலங்களில் ஏசி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மின்கட்டணமும் அதிகமாகிறது. எனவே 24 டிகிரியில் ஏசியை இயக்கினால் மின் கட்டணத்தை குறைக்கலாம்.