புதினாவை விட சிறந்த வலி நிவாரணி எதுவும் இல்லை... எக்கசக்க நன்மைகளின் பட்டியல் இதோ..!!

நறுமண மூலிகையான புதினா இலைகள், எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டவை. சுவாசத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பது முதல் செரிமானத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பது வரை இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.

புதினா உணவின் சுவையை இரட்டிப்பாக்கும் தன்மை கொண்டது. புதினா இலைகளில் பல வித சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள், பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகின்றன. கடும் கோடை கால வெப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளை மிக எளிதாகவும் விரைவாகவும் சரி செய்ய புதினா உதவுகிறது.

 

1 /7

புதினா இலைகளில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்பு, கால்சியம், தியாமின் ஆகிய சத்துக்களுடன் ஆன்டி-வைரல், ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பண்புகள் நிறைந்துள்ளதால், பல விதமான உடல் நல பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

2 /7

செரிமான பிரச்சனைகளுக்கு புதினா இலை, சிறந்த தீர்வாக அமையும். இதில் மருத்துவ பண்புகள் அஜீரணத்தைப் போக்கி, வயிற்று வலி, அசிடிட்டி போன்ற செரிமான பிரச்சனைகளை உடனடியாக நீக்குகிறது.

3 /7

புதினா இலையின் தனிப்பட்ட நறுமணம், மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து, மன அழுத்தத்தை போக்குகிறது. புதினா டீ குடிப்பதால், பதற்றம் மற்றும் கவலையிலிருந்து தற்காலிக நிவாரணம் பெறலாம்.

4 /7

புதினா இலைகள், தலைவலி முதல் பல் வலி, மூட்டு வலி, தசை வலி வரை பலவிதமான வலிகளை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. வலிகளுக்கு புதினா தைலம் அல்லது புதினா சேர்த்த கிரீம்களை பயன்படுத்துவதால் வழியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

5 /7

கோடை காலத்தில் கடும் வெப்பத்தால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் கடும் வெப்பத்தினால் ஏற்படும் பக்கவாத பாதிப்பிலிருந்து, தப்பிக்க புதினா பெரிதளவு உதவும். புதினா உடலை குளிர்வித்து வெப்பத்திலிருந்து காக்கிறது.

6 /7

புதினா இலைகள் வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு துர்நாற்றத்தையும் நீக்குகிறது. வாய் துர்நாற்றம் நீங்க சில புதினா இலைகளை மென்று சாப்பிடலாம். புதினா இலைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து குடிப்பதும், அந்த நீரை கொப்பளிக்க பயன்படுத்துவதும் பலன் அளிக்கும். 

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.