எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், கடுமையாக உழைத்தாலும் வீட்டில் செல்வம் நீடித்து நிலைக்க அன்னை லட்சுமியின் அருள் வேண்டும்.
வீட்டில் எப்போதும் பணம் நிறைந்து இருக்க பணப்பெட்டியில் இந்த பொருட்களை வைத்தால்,உங்கள் செல்வம் பல மடங்காகும்..
தாமரை மலர்: பெருமாள் விஷ்ணுவின் கைகளில் எப்போதும் இருக்கும் தாமரை, அன்னை ர்ஐ பணப்பெட்டியில் வைத்தால் லட்சுனி வாசம் செய்யும் இருப்பிடமாக உங்கள் பணப்பெட்டி மாறிவிடும். லட்சுமி தேவியை வழிபடும் போது, தாமரை மலரை வைத்து பூஜித்து, பிறகு அதை உங்கள் பணப்பெட்டியில் வைக்க வேண்டும். தாமரைப்பூ காய்ந்தவுடன், அதை உடனடியாக அங்கிருந்து அகற்றவும். தாமரை மலரை வைத்தால் செல்வம் பெருகும் என்பதும் அன்னை லட்சுமியின் அருள் மணம் பரவும் என்பதும்ம் ஐதீகம்.
சோளி, நிதி நெருக்கடியைப் போக்க உதவும் என்று நம்பப்படுகிறது. இது பல மத நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வியாழன் அல்லது வெள்ளியன்று சோளியை சிவப்பு துணியில் கட்டி பணப்பெட்டியில் வைக்கவும். இது உங்கள் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.
மஞ்சள்: அன்னை லட்சுமிக்கு மிகவும் பிடித்த மங்களகரமானப் பொருள் மஞ்சள். பணம் வைக்கும் இடத்தில் மஞ்சளை வைக்கவும். தீபாவளி, வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினத்திலும் மஞ்சளை பணப்பெட்டியில் வைக்கலாம்.
கண்ணாடி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. கண்ணாடியில் எதைப் பார்த்தாலும் அது இரட்டிப்பாகுக்ம். எனவே, பணப்பேடியின் வடக்குப் பகுதியில் ஒரு சிறிய கண்ணாடியை வைக்கவும். பணத்தை இரட்டிப்பாக்க இதைவிட சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.
லட்சுமி அன்னைக்கு சிவப்பு துணி மிகவும் பிடித்தமானது என்பது நம்பிக்கை. எனவே, பௌர்ணமி, வெள்ளிக்கிழமை, தீபாவளி என ஏதேனும் ஒரு சுப தினத்தில் சிவப்பு துணியில் 11 அல்லது 21 ரூபாய்களை முடிந்து, பணத்தை வைக்கும் இடத்தில் வைத்தால் செல்வம் பெருகும்.