New Year 2025 Astrological Predictions of All Zodiac Signs: புத்தாண்டு 2025 எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? யாருக்கு அதிக நன்மைகள் ஏற்படும்? யார் பிரச்சனைகளை சந்திப்பார்கள்?
Guru Peyarchi, Sani Peyarchi Peyarchi Palangal: ஜோதிட ரீடியாக 2025 மிக முக்கியமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் மிகப்பெரிய கிரகங்களான சனி பகவானும் குரு பகவானும் பெயர்ச்சி ஆகிறார்கள். மார்ச் மாதம் மீன ராசியில் சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. பிப்ரவரி மாதம் வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான் மே மாதம் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். 2025 -இல் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான புத்தாண்டு ராசிபலனை இங்கே காணலாம்.
மேஷம் : சனி பெயர்ச்சியும் குரு பெயர்ச்சியும் மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். இந்த ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். நிலுவையில் உள்ள பல பணிகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.
ரிஷபம்: புத்தாண்டு 2025 பண விஷயங்களில் மிகவும் சிறப்பாக இருக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலக பணிகளில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. புதிய பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்: சனி பெயர்ச்சி மிகப்பெரிய நன்மைகளை அளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தெவைப்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திடீர் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும்.
கடகம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் கடக ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். அலுபலக பணிகளில் வெற்றி கிடைக்கும். மூத்த அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
சிம்மம்: மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வீடு வாங்குவதில் பணத்தை முதலீடு செய்யலாம். ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நன்றாக இருக்கும். ரத்த அழுத்தம், வயிற்றுக் கோளாறு போன்றவற்றால் சில பிரச்னைகள் ஏற்படும். இந்த வருடம் கல்வியிலும் போட்டிகளிலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது.
கன்னி: குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு வளமான வாழ்வை அளிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு வெற்றி மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு அற்புதமாக இருக்கும். மார்ச், மே, நவம்பர் மாதங்களில் பண மழை பெய்யும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். வெளி நாட்டுக்கு பயணம் மேற்கொள்வார்கள். மொத்தத்தில், இது செழிப்பான ஆண்டாக இருக்கும். சனி பகவான் மற்றும் குரு பகவானின் முழுமையான அருள் கிடைக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு 2025 சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த ஆண்டு நல்ல காரியங்களில் பணம் செலவழிப்பீர்கள். தனுசு அல்லது மீன ராசிக்காரர்கள் உங்களுக்கு நிறைய உதவுவார்கள். ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான காலம் கொஞ்சம் செலவுகள் அதிகமாக இருக்கும். வயிற்றுக் கோளாறுகள், இரத்தக் கோளாறுகள் மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக பிரச்சினைகள் ஏற்படலாம்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு கலவையான பலன்களை அளிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். இந்த ஆண்டு மேஷம், கடகம் அல்லது சிம்ம ராசிக்காரர்கள் உங்களுக்கு நிறைய உதவுவார்கள். உடல் ஆரோகியத்தில் கவனம் தேவை. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆனால் உங்கள் மனைவியின் உடல்நிலை குறித்து நீங்கள் கொஞ்சம் கவலைப்படலாம்.
மகரம்: 2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் மகர ராசிக்காரர்கள் அதிக பண்ம சம்பாதிப்பார்கள். செப்டம்பர் முதல் நவம்பர் வரை, சொத்து வாங்குவதில் பணத்தை நன்றாகப் பயன்படுத்துவீர்கள். பிள்ளைகளின் வெற்றியால் மனம் மகிழ்ச்சியடையும். சுவாசம் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்பு உண்டு.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அனுகூலமான பலன்களை அளிக்கும். 2025 ஆம் ஆண்டு பொருளாதார வளம் நிறைந்ததாக இருக்கும். அசையும், அசையாச் சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். நிர்வாக சேவைகளுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சாதகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டு சுபமான ஆண்டாக இருக்கும். மீன ராசிக்காரர்கள் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களை மெற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.