ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து 15 ஆண்டுகளாக விளையாடுகிறார் எம்எஸ் தோனி.
சென்னை சூப்பர் கிங்ஸூம், தோனியையும் பிரித்து பார்க்க முடியாது. ஐபிஎல் தொடரில் இவரது தலைமையில் இன்றளவும் கோலோச்சிக் கொண்டிருக்கிறது சிஎஸ்கே
ரோகித் சர்மாவுக்கு பிறகு 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரே கேப்டன் எம்எஸ் தோனி. இந்த சாதனை மட்டுமல்ல, பல மகத்தான சாதனைகளை ஐபிஎல் தொடரில் கொண்டிருக்கிறார் எம்எஸ்டி.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு மினி ஏலம் நடைபெறும். அதற்காக அணிகள் தங்களது அணியில் இருந்து சில பிளேயர்களை விடுவிக்கும். அந்த வகையில் தோனியை ஒருமுறைகூட விட்டுக்கொடுக்கவில்லை.
அவரும் அதற்கேற்ப பல சகாப்தங்களை படைத்துக் கொண்டே இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி பிளேயிங் லெவனை தாத்தாக்கள் அணி என அனைவரும் கிண்டலடித்தனர்.
ஆனால், தோனி அதே அணியை வைத்துக் கொண்டு தான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அத்தினார்.
இது குறித்து தோனியிடம் கேட்டபோது, வயது குறித்து நான் சிந்திப்பதில்லை, யாரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை மட்டுமே கவனம் செலுத்துவேன், வெளி விமர்சனங்களுக்கு ஒருபோதும் காதுகொடுப்பதில்லை என பதிலளித்தார்.
தேவையானவைகளுக்கு கவனம் செலுத்தினால் எல்லாமே ஈஸியாக இருக்கும் என்பது தான் தோனியின் பார்முலா. கடினமான விஷயத்தைக் கூட எளிமையாக செய்யலாம் என்று தோனி தெரிவித்துள்ளார்.
அவரை இம்முறையும் ரீட்டெய்ன் செய்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இது தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக கூட இருக்கலாம் என்பதால் அவரை சாம்பியனாக வழியனுப்ப வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். நடக்குமா?