National Leadership Day: சிறந்த தலைவராக மாறுவது எப்படி? ஒபாமா கொடுக்கும் டிப்ஸ் இதோ!

National Leadership Day: தேசிய தலைமை தினம், இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சிறந்த தலைவராக உருவாகுவது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க. 

1 /7

இன்று, தேசிய தலைமை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், அனைவரும் சிறந்த தலைவராக இருப்பது எப்படி என்று பலர் தேடி வருகின்றனர். உலகின் சிறந்த தலைவராக கூறப்படுபவர்களுள் ஒருவர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. இவரிடம் உள்ள தலைமை பண்புகளையும் அதை பின்பற்றி எப்படி முன்னேறலாம் என்பதையும் இங்கு பார்ப்போம். 

2 /7

ஒபாமா, அதிபராக இருந்த போது  அவரது நாட்டை தாண்டி, உலகளவிலும் பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளன. அந்த சமயங்களில் அவர் துரிதமாக செயல்பட்டு பல்வேறு பிரச்சனைகளை சாதூர்யமாக கையாண்டுள்ளார். நீங்கள் சிறந்த தலைவராக ஆக விரும்பினால், அவ்வழியே நடப்பது சிறந்தது. 

3 /7

ஒபாமா, தொலை நோக்குப்பார்வை கொண்ட நபர். தன்னை சுற்றி என்ன நிகழ்கிறது என்பதையும் தன்னை சுற்றி இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையும் கவனித்து கொண்டே இருப்பார். தான் செயல்படுத்தும் திட்டங்களின் தாக்கங்களையும் அவர் கண்டறிவார். இது ஒரு நல்ல தலைவரின் சிறந்த பண்பாகும். 

4 /7

ஒபாமா, சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பவர். தனது நேர்காணல்கள், சந்திப்புகள், பயணங்கள் என அனைத்தையும் சரியாக திட்டமிடுவார். இது, ஒருவரை சிறந்த தலைவராக மாற்றவல்லது. 

5 /7

தலைமையில் இருப்பவர்களுக்கு இருக்க கூடாது பன்பு ஒன்று, பயம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என ஆராய்ந்து, அதனால் என்ன ஆபத்துகள் வரும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ற முடிவுகளை எடுக்க வேண்டும். இப்படி தைரியமாகவும் பயமின்றியும் இருப்பது ஒரு நல்ல தலைவனுக்கு அழகாகும். 

6 /7

பராக் ஒபாமா, வாழ்க்கையின் அனைத்து கோணங்களையும் பாசிடிவான கண்ணோட்டத்துடன் பார்ப்பவராக இருக்கிறார். இது, அவரை நல்ல தலைவராக உருவாக்கியது. தான் பாசிடிவாக இருப்பது மட்டுமன்றி, தன்னை சுற்றி இருப்பவர்களையும் அப்படியே வைத்துக்கொள்வார். இவருடன் இருப்பவர்கள், அப்படியே இவரது குணாதிசயத்தை பகிர்ந்து கொள்வர். இதுவும் ஒரு நல்ல தலைமை பண்பாகும். 

7 /7

எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும், மனிதர்களை மனிதர்களாக பார்க்க தவறாத தலைவர்களே சிறந்த தலைவர்களாக திகழ முடியும். அந்த வகையில், தன்னுடன் பழகுபவர்கள் மட்டுமன்றி நாட்டு மக்களிடமும் அன்பு செலுத்தி வந்தவர், ஒபாமா. சிறந்த தலைவராக வேண்டுமென்றால், பணிவாகவும் கனிவாகவும் நடந்து கொள்ள வேண்டும். 

Next Gallery