தொடங்கியது நயன்தாராவின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு! வெளியான புகைப்படங்கள்!

MANNANGATTI since 1960: டியூட் விக்கி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கொடைக்கானலில் தொடங்கி உள்ளது.  

 

1 /6

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய படங்களை தொடர்ந்து பாலிவுட்டிலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.   

2 /6

'ஜவான்' படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் தனது இரண்டாவது ஹிந்தி படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.  

3 /6

இதற்கிடையில் தமிழிலும் நயன்தாரா பல படங்களில் நடித்து வருகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'மன்னாங்கட்டி சின்ஸ் 1960' படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது.  

4 /6

பிரபல யூடியூபர் டியூட் விக்கி இந்த படத்தை இயக்குகிறார்.  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது  கொடைக்கானலில் துவங்கியுள்ளது.  

5 /6

படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து படங்களைப் பகிர்ந்துள்ளது. இவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.  

6 /6

'மன்னாங்கட்டி சின்ஸ் 1960' படத்தில் நயன்தாரா, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் நடிக்கின்றனர். சான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.