கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் இலவச beer, Ice cream: அசத்தும் சீனா, அமெரிக்கா

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்.... பீர் பாட்டில் எடுத்துக்கொள்!! ஆம்!! இது விளையாட்டாக சொன்ன வாக்கியம் அல்ல, உண்மையான வாக்கியம்!! ஒரு தனியார் அமெரிக்க பீர் நிறுவனம் இந்த சலுகையை வழங்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசி பெற தயங்குபவர்களுக்காக இந்த சலுகையை நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த சலுகை துவங்கியதிலிருந்து தடுப்பூசி மையத்தில் மக்களின் ஒரு நீண்ட வரிசை காணக்கிடைக்கிறது. 

1 /5

அமெரிக்காவின் ஓஹியோவில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு பீர் கொடுக்க Samuel Adams beer என்ற நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த சலுகையைப் பெற, தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை காட்ட வேண்டும். சான்றிதழைக் காண்பித்த பிறகு இலவசமாக பீர் பெறலாம்.

2 /5

இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகளில், கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு தடுப்பூசி பிரச்சாரத்தை விரைவுபடுத்துவதற்கான உத்தரவுகளை அரசாங்கம் வழங்கியுள்ளது. ஆனால் இன்றும் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தடுப்பூசி போட்டுக்கொண்டால் இலவசமாக பீர் கொடுப்பதாக அறிவித்துள்ளது. 

3 /5

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மரிஜுவானா உற்பத்தி நிறுவனமும் இளைஞர்களுக்கு கஞ்சாவையும் வழங்கி வருகிறது. கிறிஸ்பி கிரீம் டோனட்ஸ் என்ற நிறுவனம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவசமாக டோனட்டை வழங்குகிறது. 

4 /5

யுஎஸ் டுடே அறிக்கையின்படி, தனியார் நிறுவனங்கள் அளித்துள்ள இந்த சலுகைகளின் தாக்கம் தடுப்பூசி மையங்களிலும் காணப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதன் பின்னர், சில இடங்களில் உள்ளூர் நிர்வாகமும், தடுப்பூசி மையத்தை அடைவதற்கான கட்டணத்தை இலவசமாக்க முடிவெடுத்துள்ளது. 

5 /5

சீனாவின் சில நகரங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாக்கப்பட்டுள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பல தடுப்பூசி மையங்களில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச ஐஸ்-கிரீம் வழங்கப்படுகின்றது.