Health News: கொடை மிளகாயில் உள்ளன எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள்

கொடை மிளகாயை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. இது பல நோய்களுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாகவும் இருக்கிறது. கேப்சிகம் அதாவது கொடை மிளகாய் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு காய் வகையாகும். 

கொடை மிளகாயில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட கொடை மிளகாய் பல நோய்களுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாகவும் இருக்கிறது. இது பல ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது. கொடை மிளகாயை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இங்கே காணலாம்.

1 /6

கொடை மிளகாயை உட்கொள்வது சருமத்தை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது முகத்தில் பருக்கள் வருவதைத் தடுக்கிறது. கொடை மிளகாயில் வைட்டமின் ஏ உள்ளது. இது கண்களுக்கு நல்லது. கண் நோய்களைத் தடுக்க உதவுகிறது.

2 /6

கொடை மிளகாயில் உள்ள லைகோபீன் என்ற பைட்டோநியூட்ரியண்ட் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி 6 ஆகியவற்றின் மூலமாகும். இது ஹோமோசைஸ்டீனின் அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் இதய நோய்களுக்கான அபாயமும் குறைகிறது.

3 /6

கொடை மிளகாயை சாப்பிடுவது கொழுப்பை போக்கவும், எடையைக் குறைக்கவும் உதவும். இதனுடன் நமது செரிமானமும் மேம்படும்.

4 /6

முடி வளர்ச்சிக்கு கொடை மிளகாய் மிகவும் உதவியாக இருக்கும். இது முடி உதிர்வதைத் தடுக்கிறது மற்றும் அடர்த்தியான முடியை பராமரிக்க உதவுகிறது.    

5 /6

கொடை மிளகாய் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. ஏனெனில் இதில் அழற்சி எதிர்ப்பு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளன. இதை உட்கொண்டால், புற்றுநோய் செல்கள் உடலில் உருவாக முடியாது. நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் கொடை மிளகாயை உட்கொள்வது புற்றுநோய் போன்ற கொடிய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது.

6 /6

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கொடை மிளகாய் அதிக அளவில் உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, மூளையை கூர்மையாக்குவதிலும் கொடை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது.