Lakshmi Vilas Bank, DBS Bank இணைப்பில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

இந்தியாவின் பிரபலமான வங்கிகளில் ஒன்றாக விளங்கிய லஷ்மி விலாஸ் வங்கி சமீபத்தில் DBS வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. 

பல முடிவுகள் திடீரென் எடுக்கப்பட்டு பலர் ஆச்சரியப்படும் வகையிலும், பலர் அதிர்ந்து போகும் வகையிலும், இந்த வங்கியில் கடந்த சில நாட்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

1 /5

லக்ஷ்மி விலாஸ் வங்கி DBS வங்கியுடன் இணைந்ததால், வங்கி திவால் ஆகும் நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டதோடு, வங்கியில் பணம் போட்ட வாடிக்கையாளர்களின் பணமும் பாதுகாக்கப்பட்டது.

2 /5

DBS வங்கி சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு வங்கியாகும். இது ஆசியாவிலேயே சிறந்த நிதி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. 

3 /5

பிக்சட் டெபாசிட் (Fixed Deposit) திட்டங்களைப் பொறுத்தவரையில், பொதுவாக, இந்தியாவின் மிகச் சிறந்த வங்கிகளாக கருதப்படும், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற பல முன்னணி வங்கிகளை விட, தற்போது DBS வங்கியுடன் இணைந்துள்ள லட்சுமி விலாஸ் வங்கி அதிக வட்டியை அளிக்கின்றது.

4 /5

லட்சுமி விலாஸ் வங்கியின் அனைத்து ஊழியர்களும் தற்போது இருக்கும் அதே பணியில் DBS வங்கியின் நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், லட்சுமி விலாஸ் வங்கியில் இருக்கும் அதே கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் தொடரும் என்றும், இதில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்றும் DBS இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

5 /5

லட்சுமி விலாஸ் வங்கி குறித்த பல எதிர்மறையான செய்திகள் வந்து, இறுதியாக அந்த வங்கி DBS வங்கியுடன் இணைக்கப்பட்டதால் வங்கியின் வாடிக்கையாளர்கள் கலங்கிப்போயினர். ஆனால், இந்த விஷயத்தை சற்று மாற்றி சிந்தித்துப் பார்த்தால் லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்பதையும் இந்த இணைப்பால் பல நன்மைகளே நடந்துள்ளன என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.