1 டிசம்பர் 2020 முதல் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. வங்கியின் பல விதிகள் 2020 டிசம்பர் 1 முதல் மாறப்போகின்றன. இந்த விதிகள் பண பரிமாற்றத்துடன் தொடர்புடையவை. மிகப்பெரிய மாற்றம் RTGS பற்றியது.
ரியல் டைம் க்ராஸ் செட்டில்மெண்டான RTGS தொடர்பான விதிகளில் ரிசர்வ் வங்கி மாற்றங்களை செய்துள்ளது.
புதிய விதியின் கீழ் இப்போது 24 மணிநேரமும் RTGS வசதி கிடைக்கும். ரிசர்வ் வங்கி இந்த முறையை டிசம்பர் 1 முதல் செயல்படுத்தும். இப்போது இந்த சேவை 24 மணி நேரம் கிடைப்பதில்லை. பெரிய பரிவர்த்தனை அல்லது அதிக அளவிலான நிதி பரிமாற்றத்தை மனதில் வைத்து ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி தனது அக்டோபர் கடன் கொள்கையில் 24 மணி நேரம் RTGS தொடக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்ற பல வழிகள் உள்ளன. அவற்றில், மிகவும் பிரபலமானவை RTGS, NEFT மற்றும் IMPS. கடந்த ஆண்டு டிசம்பரில், NEFT-டும் 24 மணி நேர சேவையானது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, RTGS சேவை இப்போது காலை 8 மணி முதல் இரவு 7:55 மணி வரை கிடைக்கிறது.
RTGS மூலம் நிதி பரிமாற்றம் வேகமாக நடக்கும். குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் வரையிலான நிதியை பரிமாற்ற முடியும். இந்த பரிவர்த்தனையை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். இது உடனடி நிதி பரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது. காலை 8 மணி முதல் 11 மணி வரை RTGS கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
RTGS-ஐ நீங்கள் வங்கி கிளைக்கு சென்று அல்லது ஆன்லைனில் செய்யலாம். ஆன்லைன் நிதி பரிமாற்றத்தில், நீங்கள் RTGS என்ற ஆபஷனைத் தேர்ந்தெடுத்து பயனாளியின் வங்கி விவரங்களை உள்ளிட்டு அதைச் சேர்க்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை நிரப்பி சமர்ப்பிக் வேண்டும்.
இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு, காப்பீட்டாளர் பிரீமியம் தொகையை 50 சதவீதம் குறைக்க முடியும். அதாவது, அரை தவணையுடன் கூட அவர் பாலிசியைத் தொடர முடியும்.