5000 ரூபாயில் அற்புத வர்த்தகம், மாதா மாதம் பெரிய லாபம்: காசு கொட்டும் காளான் வளர்ப்பு!!

கொரோனா நெருக்கடி காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையால், லட்சக்கணக்கான மக்களின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. பலர் வேலை இழந்துவிட்டனர். ஆனால் இந்த கடினமான நெருக்கடியிலும், யாரும் அதிகமாக அச்சப்படத் தேவையில்லை. உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்கி நன்றாக சம்பாதிக்கலாம். இன்று, அப்படிப்பட்ட ஒரு வணிகத்தைப் பற்றி பார்க்கலாம். இதில் நீங்கள் 5000 ரூபாய் மட்டும் செலவழித்து ஒவ்வொரு மாதமும் அதிக பணம் சம்பாதிக்க முடியும்.

1 /5

இந்நாட்களில் நாட்டில், காளான் வளர்ப்பு சிறிய அளவு முறை பெரிய அளவு வரை அனைத்து அளவுகளிலும் செய்யப்படுகிறது. இப்போது நீங்களும் ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம். ஆரம்பத்தில், இதற்காக உங்களுக்கு அதிக பணம் மற்றும் இடமும் தேவைப்படாது. 

2 /5

இந்த வணிகத்தை நீங்கள் ஒரு அறையிலிருந்தும் தொடங்கலாம். இந்த வணிகத்திற்கு, நீங்கள் 5 முதல் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவிட வேண்டும். காளான் வளர்ப்பைப் பொறுத்தவரை, நீங்கள் 30 முதல் 40 கெஜம் வரையிலான ஒரு அறையில் கலவையை (காளான் வளரும் மண் மற்றும் விதையின் கலவையை) ஒரு அறையில் வைக்க வேண்டும்.

3 /5

இந்த கலவையை சந்தையில் நீங்கள் எளிதாகப் பெறலாம். இது தவிர, நீங்கள் பாக்கெட்டில் விற்கப்படும் கலவையையும் வாங்கலாம். இந்த பாக்கெட்டுகளை நிழலில் அல்லது அறையில் வைக்க வேண்டும். இதற்குப் பிறகு, காளான்கள் 20 முதல் 25 நாட்களுக்குள் வளரத் தொடங்குகின்றன.

4 /5

காளான்களை வளர்த்த பிறகு, நீங்கள் அவற்றை வீட்டிலேயே பேக் செய்து, ஏதாவது நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, சந்தையிலோ அல்லது ஆன்லைனிலோ விற்கலாம். அல்லது நீங்கள் உங்கள் சொந்த செயலியை உருவாக்கி, இந்த வணிகத்தை பெரிய அளவில் தொடங்கலாம். உங்களால் முடிந்த அளவில் நீங்கள் இதில் முதலீடு செய்து பணம் ஈட்டலாம்.

5 /5

இந்த நேரத்தில், ஒரு கிலோகிராம் காளான் பாக்கெட் சந்தையில் 100 முதல் 150 ரூபாயில் கிடைக்கிறது. இந்த வழியில் குறைந்த செலவில் அதிக லாபம் சம்பாதிக்கலாம். இது தவிர, பல நிறுவனங்களும் இந்த வகை விவசாயத்திற்கு பயிற்சியும் அளிக்கின்றன. நீங்கள் பயிற்சியை மேற்கொண்டும் இந்த தொழிலைத் தொடங்கலாம்.