காஷ்மீர் பள்ளத்தாக்கு பருவத்தின் முதல் பனிப்பொழிவைப் பெறுகிறது...வழக்கமாக ஆண்டுதோறும் இந்த பருவத்தில் அனைவரும் ஜம்மு-காஷ்மீர், சிம்லா, குல்லு-மணாலி என பனிபடர்ந்த இடங்களுக்கு சுற்றுலா சென்று பனியின் குளிரை அனுபவிப்பார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸின் தாக்கத்தால் அனைத்தும் மாறிப் போய்விட்டன. எனவே, பனிமலைக்கு சென்று மகிழும் அனுபவம் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்... பனிமலையில் முதல் பனிப்பொழிவு புகைப்படங்களாக. வாருங்கள் புகைப்படத்திலாவது சுற்றுலா சென்றுவருவோம்...
ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கிவிட்டது. ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று மைனஸ் மூன்று (-3) டிகிரி செல்சியஸ் ஆகும்.
ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியது. ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று மைனஸ் மூன்று (-3) டிகிரி செல்சியஸ் ஆகும்.
ஸ்ரீநகர்-ஜம்மு பன்னிஹால் பகுதியில் பனிப்பொழிவு தொடங்கியது. சாலைகள் னிப்போர்வையால் மூடப்பட்டு, வெண்பனிச் சாலைகளாகின.
ஜம்மு பிரிவில் குறைந்தபட்ச வெப்பநிலை: ஜம்மு நகரம் 11.7, கத்ரா 11.2, படோட் 3.6, பன்னிஹால் 3.4 மற்றும் படேர்வா 2.8 டிகிரி செல்சியஸ்.
"அடுத்த 48 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் மழை பொழியலாம், பனிப் பொழிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது, ஆனால் கடும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்பில்லை" என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேகமூட்டம் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலையில் முன்னேற்றம் இருப்பதாக MET அதிகாரிகள் தெரிவித்தனர். பனிப்பொழிவுக்குப் பிறகு Mughal Road மூடப்பட்டது காஷ்மீர் பிரிவை ஜம்மு பிரிவுடன் இணைக்கும் Mughal Road மிகவும் பிரபலமானது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பருவத்தின் முதல் பனிப்பொழிவைப் பெறுகிறது. இன்று பஹல்காம் மற்றும் குல்மார்க்கில் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 0.3 மற்றும் மைனஸ் 4.5 ஆக இருந்தது.