Pongal Gift | குடும்ப அட்டைதாரர்களுக்கு GOOD NEWS.. பொங்கல் பரிசாக ரூ.750.. முதல்வர் அறிவிப்பு

Puducherry Pongal Gift Latest News: புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

Puducherr Latest News: பொங்கல் பண்டிகையை ஒட்டி புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புக்கு பதிலாக 750 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

1 /8

2025 பொங்கல் பரிசு ரேஷன் அட்டைக்கு ரூ.750 வழங்கப்படும் என அரசு சார்பில் அதிரடியான தகவல் வெளியாகி இருக்கிறது. இதுக்குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ளும்வோம். 

2 /8

புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது அப்போதைய ஆளுனர் கிரண்பேடிக்கும், அப்போதைய புதுச்சேரி அரசுக்கும் மோதல் ஏற்பட்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டது. இதனையடுத்து பயனாளிகள் வங்கிக் கணக்கில் ரேஷன் பொருட்களுக்கு பணம் செலுத்தப்பட்டு வந்தது. 

3 /8

2021 ஆம் ஆண்டில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி வந்தவுடன் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலைப்பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. 

4 /8

கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. அதேபோல கடந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு பொருட்கள் தொகுப்புக்கு பதிலாக அரசு ரூ.500 பணம் வழங்கியது. அதன் பிறகு கூடுதலாக ரூ.250 தரப்பட்டது. அதாவது மொத்தமாக ரூ.750 கடந்த ஆண்டு தரப்பட்டது. 

5 /8

தீபாவளி அன்று ரேஷன் கடைகளை திறந்தது ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, சர்க்கரை தீபாவளி பண்டிகைக்கு புதுவை அரசு தரப்பில் தரப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாதம்தோறும் இலவச அரிசியும் 15 நாட்களுக்குள் தரப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

6 /8

தமிழகத்தைப் பொறுத்த அளவில் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உட்பட பொங்கல் தொகுப்பு பொருட்கள் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு. இதற்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 

7 /8

ஆனால் புதுச்சேரியில் பொங்கல் தொகுப்புக்கான ஆரம்பக்கட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பொங்கல் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டாலும், அதற்கு அனுமதி பெற்று டெண்டர் கோறி பொருட்களைப் பெற்று விநியோகிக்க போதிய காலவகாசம் இல்லை. இந்த நிலையில், பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. எனவே பொங்கல் தொகுப்பு பொருட்கள் கிடைக்குமா? என புதுவை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

8 /8

இதனையடுத்து பொங்கல் பரிசு குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "பொங்கல் பண்டிகையை ஒட்டி புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரூபாய் 750 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பணம் பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் மற்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.