பெண்களுக்கு இலவச தையல் மிஷின்களை வழங்கிய ராகவா லாரன்ஸ்..

ராகவ  லாரன்ஸ் இயல்பான சாதாரணமான மனிதர். தன்னை ஹீரோவாக நினைக்கும் மக்களுக்கு முடிந்ததை உதவி செய்யும் எளிமையான குணம் கொண்டவர். மேலும் படிப்போம்.

ராகவா லாரன்ஸ் தனது 48 வது பிறந்தளையொட்டி மாற்றம் அறக்கட்டளை பெண்களுக்கு இலவச தையல் மிஷன்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். பல மாற்றுத்திறனாளிகள் முதல் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு உதவி செய்து வருவது இவரின் இயல்பான பழக்கம். ஆனால் அதை மக்களுக்கு எந்தவிதத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமோ அதற்காக தீவிரமாக களம் இறங்கியுள்ளார். மேலும் படிப்போம்.

1 /8

ராகவா லாரன்ஸ் பிறந்த நாளான இன்று தன்னுடைய மாற்றம் அறக்கட்டளை பெண்களுக்கு தையல் மிஷின்கள் வாங்கி கொடுத்து பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடி மகிழ்ந்தார்.

2 /8

ராகவா லாரன்ஸ் தன்னை ஒரு நடிகராக சினிமாவில் நடிக்கும்போது மட்டும் காட்டிவிட்டு வெளியில் சாதராண மனிதராக இருப்பது வியப்பிற்குரியது என்று மக்கள் கூறுகின்றனர்.

3 /8

கைத்தொழில் ஒன்றை கற்றுகொள் என்ற பழமொழிக்கேற்ப பெண்கள் தொழில்துறையில் வளர்ச்சி அடையும் விதமாக ராகவா லாரன்ஸ் இதனை வாங்கி கொடுத்துள்ளார்.

4 /8

ராகவா லாரன்ஸ் மாற்றம் அறக்கட்டளைத் தொடங்கக் காரணம் : ராகவா லாரன்ஸ் தன்னுடன் இணைந்து படித்தவர்கள் மற்றவர்களுக்கு உதவ நினைத்தனர். இதனால் மாற்றம் அறக்கட்டளை ஆரம்பித்தோம் என்று கூறினார்.  

5 /8

ராகவா லாரன்ஸ் மாற்றம் அறக்கட்டளையில் அரந்தாகி நிஷாவும் உதவி செய்து வருகிறார். நிஷா விவசாயி மற்றும் கல்வி போன்றவற்றிக்கு உதவி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.  

6 /8

ராகவா லாரன்ஸ் நடன இயக்குநர் மற்றும் நடிகர் என்பதை விட ஏழை மற்றும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு உதவி  செய்யும் மாபெரும் மனிதர் என்று மக்கள் புகழ்ந்து கூறுகின்றனர்.

7 /8

ராகவா லாரன்ஸ் ஒரு நிகழ்ச்சியில் விருது வாங்கும்பொழுது மேடையில் சிறிது கூச்சம் இல்லாமல் தன்னுடைய அறக்கட்டளைக்கு உதவி செய்யுமாறு விழாவில் கலந்துகொண்ட உதயநிதியிடம் தன்மையாக கேட்டார்.

8 /8

ராகவா லாரன்ஸ் உதவி செய்வதில் மிகுந்த நல்ல பண்பை கொண்டவர். அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிக்கு தான் நடிக்கும் படங்களில் வாய்ப்பும் கொடுத்து உதவுவார் என்பது குறிப்பிடத்தக்கது.