Hardik Pandya & Natasa Stankovic: பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் விவாகரத்து செய்து கொண்டனர். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் இருவருக்கும் விவகாரத்திற்கு முன்பே, சில மாதங்களாக பேச்சு வார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஹர்திக் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் சில சறுக்கல்களை சந்தித்தார்.
ஹர்திக் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் அளித்த வேளையில், அவரது குடும்பத்திற்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது காலப்போக்கில் நடாசா உடனான உறவில் பிரிவை ஏற்படுத்தி உள்ளது.
ஹர்திக் மனைவி நடாசா இந்தியாவில் இருந்ததை விட, அதிக நேரம் அவரது சொந்த நாடான செர்பியாவில் தான் நேரத்தை கழித்துள்ளார். இது உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
ஹர்திக் பாண்டியா இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர், அதே சமயம் நடாசா செரிபியாவில் பிறந்து வளர்ந்தவர். இருவருக்கும் இடையில் உள்ள வெவ்வேறு கலாச்சார பின்னணிகள் சில சவால்களை சந்தித்து உள்ளனர்.
இருவரும் திருமணம் செய்து கொண்ட போது இருந்த நட்பும் காதலும், அவர்களுக்கு குழந்தை பிறந்த பிறகு அப்படியே மாறிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் வருவதும் சகஜமாகி உள்ளது.
இறுதியில் ஹர்திக் மற்றும் நடாசா இருவரும் தங்கள் மகன் அகஸ்தியாவிற்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க விவாகரத்து பெறுவதாக முடிவு எடுத்துள்ளனர். இருப்பினும் இருவரும் சேர்ந்து மகனை வளர்க்க திட்டமிட்டுள்ளனர்.