எச்சரிக்கை... இந்த ஐந்து புரத உணவுகள் ஆரோக்கியத்தை காலி செய்து விடும்

புரதச்சத்து நம் உடலுக்கு மிகவும் அவசியம். உடல் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன், தசைகளை உருவாக்க உதவுவதோடு, கண்கள், சருமம், கூந்தல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, செல்கள் மற்றும் ஹார்மோன்கள் செயல்பாடுகளுக்கும் அவசியம்.

நம் அன்றாட உணவில், புரதச்சத்து மிக்க உணவுகளை சேர்த்துக் கொள்வது மிக அவசியம். முட்டை, சோயா பீன்ஸ், பருப்பு வகைகள், பீன்ஸ் வகைகள், பால் பொருட்கள் ஆகியவை புரதச்சத்தின் சிறந்த ஆதாரங்கள்.

 

1 /8

புரதச்சத்து நிறைந்த உணவுகள்: நம் உடலுக்கு புரதச்சத்து அவசியம் என்றாலும், குறிப்பிட்ட சில புரதச்சத்து நிறைந்த உணவுகள், ஆரோக்கியத்தை காலி செய்துவிடும். சில உணவுகள் மூலம் கிடைக்கும் புரதங்கள் உடல் வளர்ச்சிக்கு உதவும் அதே நேரத்தில், ஆரோக்கியமற்ற புரத உணவுகள் எவை என்பது அறிந்து கொள்ளலாம்.

2 /8

சுவையூட்டப்பட்ட தயிர்: தயிரில் அதிக புரதம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் சந்தையில் கிடைக்கும் சுவையூட்டப்பட்ட தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதில் அதிக அளவிலான சர்க்கரை, செயற்கை சர்க்கரை பயன்படுத்தப்படுகின்றன. இதனை தினமும் அருந்துவதால் புற்றுநோய் போன்ற அபாயம் அதிகரிக்கிறது என்னை எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.  

3 /8

புரோட்டின் பவுடர்: சந்தையில் கிடைக்கும் புரோட்டின் பவுடர் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு பெரிதும் தீங்கு விளைவிக்கும். இதில் அதிக அளவிலான சர்க்கரை மற்றும் கலோரிகள் உள்ளதால் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயமும், இதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

4 /8

பதப்படுத்தப்பட்ட இறைச்சி: புரதம் நிறைந்த பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இவை இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. பதப்படுத்தப்பட்ட இறைச்சியில், நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவை.

5 /8

பொறித்த இறைச்சி: இறைச்சியை சூடான எண்ணெயில் பொரிக்கும்போது, அதில் அக்ரிலாமைடு அதிகரிக்கிறது. இது இதய நோய் மற்றும் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்க கூடியவை. மேலும் இதில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு மற்றும் கூடுதல் கலோரிகள் உடல் பருமன் பிரச்சனையை அதிகரிக்கின்றன.

6 /8

அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்: கொழுப்பு நிறைந்த பால், தயிர், பனீர், சீஸ் போன்றவை புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்தவை என்றாலும், அதனை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது, உடல் பருமன் மற்றும் இதய பிரச்சினை அபாயத்தை அதிகரிக்கும்.

7 /8

புரதச்சத்து நிறைந்த இயற்கை உணவுகள்: ஆரோக்கியமான புரத உணவுகளை உண்பதன் மூலம், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எனவே செயற்கை முறையில் செறிவூட்டப்பட்ட புரதச்சத்துகளை தவிர்த்து, புரோட்டின் நிறைந்த முட்டை, சோயா பீன், பன்னீர் ஆகிய உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம், ஆரோக்கியமாக இருக்கலாம்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.