சமூக ஊடகங்களால் பிரியும் உறவுகள்..இனிமே இந்த விஷயத்தைச் செய்யவே செய்யாதீங்க !

உறவுகளிடையே பிரிவு ஏற்பட முக்கியக் காரணங்கள் நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். உறவு வலுவாக இருக்கவும் மற்றும் அதனைச் சரியான முறையில் பார்த்துக்கொள்ளவும் உங்களுக்கான சில டிப்ஸ் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

வளர்ந்து வரும் பொருளாதாரமும் அதன் மாற்றமும் கணிசமாக மக்களை மாற்றி வருகிறது. குறிப்பாக சமூக ஊடகங்கள் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துவிட்டது.  இதன் தேவைகள் ஒரு புறம் அவசியமாக இருந்தாலும், மறுபுறம் இதன் எதிர்விளைவுகளும் இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. 

 

1 /8

தொடர்புத்திறன்: உறவுகளிடையே முறையான பேச்சுவார்த்தை அல்லது பாசமான தொடர்பு எப்போதும் இருக்க வேண்டும். கஷ்டம் மற்றும் சந்தோஷங்களைப் பகிரத் தொடங்கவும். சண்டை உருவாகும் விஷயங்களை முற்றிலும் செய்யாதீர்கள்.

2 /8

ஒருவருக்கொருவர் பிணைப்பு: சண்டையிட்டுப் பிரிந்தாலோ அல்லது சேர்ந்தாலோ முடிந்த விஷயங்களை மீண்டும் உறவில் கொண்டு வராதீர்கள். இது உங்கள் உறவை முற்றிலும் பாதிக்கச் செய்யும்.

3 /8

வலுவான உறவு: குடும்பம் மற்றும் கணவன், மனைவி யாராக இருந்தாலும் அவர்களுக்கான மரியாதைக் கொடுக்க வேண்டும்.  மரியாதை பண்பும் மற்றும் தனித்துவ பண்பும் உங்கள் உறவை வலுவாக்கும்.

4 /8

பொறாமை : உறவில் பொறாமை என்பது இருக்கக்கூடாது. அன்பு, அக்கறை மற்றும் அரவணைப்பு இது மட்டுமே உங்கள் உறவில் இருக்க வேண்டும். 

5 /8

சந்தேகம்: ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சந்தேகம் உறவுகளில் நீடித்தால் முறிவு ஏற்படும்.   

6 /8

அழுத்தம்: ஒரு உறவு ஆரோக்கியமாக இருக்க மன அமைதி தேவை. தேவையற்ற அழுத்தம் உறவில் அதிகரித்தால் கடுமையான பாதிப்பைச் சந்திக்க நேரிடும். 

7 /8

தனிப்பட்ட விருப்பம்: தனிப்பட்ட விருப்பத்திற்கு முற்றுகை இடக்கூடாது. தனிப்பட்ட விருப்பம் அனைவருக்கும் தேவைப்படும். அதற்கு அங்கீகாரம் கொடுப்பது உறவுகளின் கடமை. 

8 /8

தேவையற்ற பேச்சு: சமூக ஊடகங்களில் அல்லது இணையத்தில் இருக்கும் விஷயங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு உறவில் வன்முறையை உருவாக்கக் கூடாது.