சிலருக்கு அடிக்கடி தலை வலி ஏற்படும். ஆனால், சிலர் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் அதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதற்கான தீர்வை எளிதாக பெறலாம்.
தலைவலி வந்த உடனே மாத்திரை போடும் பழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது. ஆனால், அளவிற்கு அதிகமாக வலி நிவாரணி எடுத்துக் கொள்வது, பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
தலைவலி அடிக்கடி ஏற்படுவதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். மன அழுத்தம், இரத்த அழுத்தம், நீர் சத்து குறைபாடு போன்றவை. அடிக்கடி தலைவலி ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொண்டால், அதற்கு எளிதில் தீர்வு காணலாம்.
இரத்த நாளங்களில், இரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால், தலைவலி ஏற்படுகிறது. இந்நிலையில், இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, தலைவலி அடிக்கடி ஏற்அடலாம். அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் இரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டும்.
இரத்தத்தில் ஹூமோகுளோபின் குறைவாக இருந்தால், அடிக்கடி தலைவலியை உணரலாம். உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தாலும் தலைவலியுடன் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம். எனவே அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், ரத்த பிரிசோதனை செய்து கொள்வது நல்லது.
உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அடிக்கடி தலைவலி ஏற்படலாம். எனவே, அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், உங்கள் சர்க்கரை அளவை சோதித்து பார்க்க வேண்டும்
மிக குறைந்த அளவு தண்ணீர் குடித்தால், உடலில் நீர்சத்து குறைந்து அடிக்கடி தலைவலி ஏற்படலாம். அதனால், அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் தலைவலி பிரச்சனையை தவிர்க்கலாம்.
தூக்கமின்மை காரணமாக தலைவலி அடிக்கடி ஏற்படலாம். மன அழுத்தம் காரணமாகவும், தலைவலி பிரச்சனை ஏற்படும். இரவு ஷிப்டில் அதிகம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி தலைவலி பிரச்சனையினால் பாதிக்கப்படுவார்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.