மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ஏலம் இன்று மதியம் தொடங்கியுள்ளது. இந்திய அணியில் உள்ள பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.
கேஎல் ராகுல், முகமது ஷமி, முகமது சிராஜ், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் இந்த ஆண்டு ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் எந்த அணிக்கு ஏலத்தில் போகப் போறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. முதல் செட்டில் இடம்பெற்று இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பந்த் 20 கோடிக்கு அதிகமாக ஏலம் போகியுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக ஐயர் மாறினார்.
ஆனால் அதற்கு அடுத்து ஐந்தாவது நிமிடத்திலேயே ரிஷப் பந்த் இந்த சாதனையை முறியடித்தார். 27 கோடிக்கு அவரை லக்னோ அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
டெல்லி அணி RTMஐ பயன்படுத்திய நிலையில் 27 கோடி என விலையை நிர்ணயித்தது லக்னோ அணி. ஆனால் கடைசியில் டெல்லி அணி விலக லக்னோ அணி பந்தை தங்கள் அணியில் உறுதி செய்தது.