பிரதமர் கிசான் சம்மன் என்பது மத்திய அரசுத் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பயனாளிகளுக்கு மூன்று தவணைகளில் ஆண்டு தோறும் ₹6,000 மானியம் வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் என்பது இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு தலா ₹2,000 என மூன்று தவணைகளில் ஆண்டிற்கு ₹6,000 மானியம் வழங்கும் அரசு திட்டமாகும். இந்த திட்டத்தின் படி, அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ₹6,000 கிடைக்கும்.
மத்திய அரசின் ₹75,000 கோடி திட்டமானது, 12 கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வருடாந்திர நிதி உதவி 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும், அல்லது 2 ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் கிசான் திட்டத்தை 2018 டிசம்பர் 1, அன்று தொடங்கினார்.
இருப்பினும், பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் இதுவரை தங்களை பதிவு செய்யாதவர்கள், இந்த மாத இறுதிக்குள் பதிவு செய்யவேண்டும், அதாவது மார்ச் 31, அரசாங்கத்திடமிருந்து ₹4,000 பெற இந்த பதிவு அவசியம்.
பதிவு செய்பவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஹோலிக்குப் பிறகு முதல் தவணை ₹2000 (மார்ச் 28-29 தேதிகளில் வரும்) மற்றும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இரண்டாவது தவணை ₹2,000 கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் 'புதிய விவசாயி பதிவு' ('New Farmer Registration') என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும். கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். பின்னர் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் தனிப்பட்ட தகவலுடன் படிவத்தை நிரப்பவும். உங்கள் வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பித்து படிவத்தையும் சமர்ப்பிக்கவும்.
1. ஆதார் அட்டை 2. குடியுரிமை சான்றிதழ் 3. நில உரிமையாளர் ஆவணங்கள் 4. வங்கி கணக்கு விவரங்கள்