மூன்று புதிய பிரிவில் வேற லெவல் ப்ரீபெய்ட் திட்டங்களை வெளியிட்ட Jio..

டெலிகாம் டாக் அறிக்கையின்படி, இந்த பிரிவுகள் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே கிடைக்கக்கூடிய சில திட்டங்களை விவரிக்கின்றன – ஒரு குறிப்பிட்ட திட்டத்தை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தினால் அது  “Best Selling” (சிறப்பாக விற்பனையாபவை) என்று அழைக்கப்படுகிறது.

  • Mar 06, 2021, 13:47 PM IST

ரிலையன்ஸ் ஜியோ தனது “பெஸ்ட் செல்லிங்” பிரிவின் கீழ் நான்கு திட்டங்களை பட்டியலிட்டுள்ளது. ரூ.199 தான் இதில் மலிவான திட்டமாகும். ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

1 /5

இந்த பிரிவில் இரண்டாவது திட்டம் ரூ.555 விலையிலான திட்டம் ஆகும். இது ரூ.199 திட்டத்தின் அதே நன்மைகளை வழங்குகிறது, ஆனால் இது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். ரூ.599 விலைக்கும் மேலான மற்றொரு திட்டம் ரூ.2,399 விலையிலானது, இது தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்கும் மற்றும் இது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

2 /5

“சூப்பர் வேல்யூ” திட்டங்களில் ரூ.249 மற்றும் ரூ.2,599 திட்டங்கள் உள்ளன. ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் வருகிறது மற்றும் இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். ரூ.2,599 விலையிலான திட்டம் 2 ஜிபி தினசரி தரவு மற்றும் கூடுதல் 10 ஜிபி தரவுடன் வருகிறது. இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். 

3 /5

மேலும், ரூ.399 மதிப்புள்ள இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவையும் இலவசமாக வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உடன் வழங்குகின்றன.

4 /5

இந்த பிரிவின் கீழ் ஒரே திட்டம் மட்டுமே பட்டியலிடப்பட்டு உள்ளது, இது ரூ.349 விலையிலானது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3 ஜிபி தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது மற்றும் இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

5 /5

இந்த பிரிவின் கீழ் உள்ள அனைத்து திட்டங்களும் JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud போன்ற Jio பயன்பாடுகளுக்கு இலவச சந்தாவை வழங்குகின்றன.