சாம்சங் தனது சமீபத்திய M-சீரிஸ், Galaxy M04 செல்போனை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் விலை ரூ. 8,999 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், Galaxy M04 புதுமையான ரேம் பிளஸ் அம்சம் கவனிக்க தக்க வகையில் இருப்பதாகவும், அதன் மூலம் பயனர்கள் செல்போனின் ரேம் சேமிப்பகத்தை விரிவாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
RAM Plus வசதி மூலம், பயனர்கள் Samsung M04 இல் 8GB RAM வரை ரேம் சேமிப்பை நீட்டிக்கலாம். இது ரூ. 10,000 வகை செல்போன்களில் தனித்துவமானது.
இந்த செல்போனில் 5000mAh பேட்டரி சக்தி இருப்பதாக தகவல் கூறுகின்றன. இது உண்மை என்றால், இந்த செல்போனை ஒருநாள் முழுவதும் தொடர்ந்து பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.
இந்தாண்டு தொடக்கத்தில், சாம்சங் M13, M33 ஆகிய இரு மாடல்களை மிகவும் ஸ்டைலான மற்றும் சக்திமிக்க அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியது.
90s கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரை அனைவராலும் மிகவும் விரும்பப்படும் செல்போனாக சாம்சங் எம் சீரிஸ் மாடல் இருந்து வருகிறது. எம் சீரிஸ் மூலம் மட்டும் சாம்சங் 1 பில்லியன் அமெரிக்க டாலரை வருவாயாக ஈட்டியதாக கூறப்படுகிறது.