In Pics: உலகின் மிக மர்ம கிராமமான ‘இறந்தவர்களின் நகரம்’

மனிதனின் கற்பனைக்கும் எட்டாத வகையிலான ‘இறந்தவர்களின் நகரம்' என்று அழைக்கப்படும் இந்த மர்மமான கிராமத்தைப் பற்றிய தகவல்களை இன்று நாம் அறிந்து கொள்ளலாம்

மனிதனின் கற்பனைக்கும் எட்டாத வகையிலான ‘இறந்தவர்களின் நகரம்' என்று அழைக்கப்படும் இந்த மர்மமான கிராமத்தைப் பற்றிய தகவல்களை இன்று நாம் அறிந்து கொள்ளலாம்

Image Credit:  Socila Media

1 /10

Dargavs : The city of the dead - இந்த  உலகம் பல மர்மங்கள் நிறைந்தது. இன்றும் கூட பல மர்மமான இடங்கள் உள்ளன. இன்று நாம் ‘இறந்தவர்களின் நகரம்'  (Dargavs : The city of the dead ) என்று அழைக்கப்படும் இந்த மர்மமான கிராமத்தைப் பற்றிய தகவல்களை கேட்டால் நீங்கள் உண்மையிலே  அதிர்ச்சியில் உறைந்து போவீர்கள் Image Credit:  Social Media

2 /10

தர்காவ்ஸ் ரஷ்யாவில் அமைந்துள்ள இந்த மர்மமான கிராமம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு வெள்ளை கற்களால் ஆன பல கல்லறைகள் உள்ளன. உள்ளூர் மக்களிடையே இந்த இடத்தைப் பற்றி பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. இங்கு சென்றவர் திரும்பி வரமாட்டார் என்று அவர்கள் நம்புகிறார்கள். சில சமயங்களில் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொண்டு வருகிறார்கள். Image Credit:  Social Media  

3 /10

உள்ளூர் மக்கள் தங்கள் குடும்பங்களின் உடல்களை இந்த கல்லறையில் புதைத்தனர். இவற்றில் பல கல்லறைகள் நான்கு மாடிகள் கொண்டவை. மரணத்திற்குப் பிறகும், உணர்ச்சிபூர்வமான தொடர்பு உள்ளது என்பதன் அடிப்படையில் இது கட்டப்பட்டுள்ளது. இவை  14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டன என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். Image Credit:  Social Media  

4 /10

இங்குள்ள கல்லறைகளுக்கு அருகில், பல காலங்களாக படகுகளும் இருக்கின்றன என ரஷ்ய மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகளுடன் தொடர்புடைய பேராசிரியர்கள் கூறுகின்றன. கிசெல்டன் ஆற்றின் அருகே அமைந்துள்ள மர்மமான கிராமத்தைச் சுற்றி வாழும் மக்களிடையே ஆன்மா சொர்க்கத்தை அடைய ஆற்றை கடக்க வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது, எனவே உடல்களை படகில் வைத்து புதைத்தனர். Image Credit:  Social Media  

5 /10

ஒவ்வொரு கல்லறையின் முன்னும் ஒரு கிணறு இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இறந்தவர்களை புதைத்த பின், ​ நாணயத்தை கிணற்றில் வீசும் பழக்கம் இருந்தது, நாணயம் நேரடியாக கல்லறையில் உள்ள கற்களைத் தாக்கினால், ஆன்மா சொர்க்கத்தை அடைந்தது என்று நம்பப்பட்டது. Image Credit:  Social Media  

6 /10

இந்த இடத்தை அடைவதற்கான வழியும் மிகவும் கடினம். மலைகளுக்கு இடையே உள்ள குறுகிய சாலைகளின் வழியாக இங்கு செல்ல சுமார் மூன்று மணி நேரம் ஆகும். ஆற்றின் அருகில் அமைந்துள்ள இந்த கிராமத்தை அடைவது சாகச வீரர்களுக்கு கூட எளிதானது அல்ல. Image Credit:  Social Media  

7 /10

இங்கு வானிலை எப்போதும் மோசமாக இருப்பதால் பயணம் செய்வது மிகவும் கடினம்.  மேலும், மர்மமான கிராமத்தை காண இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, வழிகாட்டிகள் கூட எளிதில் கிடைப்பதில்லை. Image Credit:  Social Media

8 /10

சுமார் 100  கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன. அணுக கடினமாக உள்ள இந்த பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்கள் அந்த காலத்தில் அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப உடைகள் மற்றும் உடமைகளுடன் உறவினர்களை அடக்கம் செய்தனர். கல்லறைகள் குடிசைகள் போன்ற வடிவத்தில் இருந்தன.  Image Credit:  Social Media

9 /10

இந்த கல்லறைகள் வளைந்த கூரைகளுடன், கூர்மையான வடிவமைப்புடன்,  அக்கால கட்டிடக்கலையின் தனித்துவமான மாதிரியாக கருதப்படுகிறது. Image Credit:  Social Media

10 /10

இந்த இடத்துடன் தொடர்புடைய பல புராணங்களும் நம்பிக்கைகளும் உள்ளன. இந்த இடம் இறந்தவர்களின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.  Image Credit:  Social Media